இவரை எதுக்கு டெஸ்ட் அணியில் சேத்தீங்க ? ரொம்ப மோசமா பவுலிங் போடுறாரு – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Saini
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்து வந்த ஆஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளானர். இதில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்தில் விக்கெட் இழந்தார். இதன் பிறகு புவோஸ்கி(62) மற்றும் லபுஸ்சேன்(91) சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் விளாசினர்.

pucovski 1

கடந்த நான்கு இன்னிஸ்சில் சொதப்பிய ஸ்மித் தற்போது விக்கெட் இழக்காமல் நிதானமாக விளையாடி 131 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஆஸதிரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 10 விக்கெட் இழந்து 338 ரன்கள் எடுத்துள்ளனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
ரோகித் சர்மா 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சும்பன் கில் மீண்டும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்திருந்த போது பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் விக்கெட் இழந்தார். இதையடுத்து தற்போது முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் ஜடேஜா 4 விக்கெட்டையும், நவதீப் சைனி 2 விக்கெட்டும் பும்ரா 2 விக்கெட்டும் எடுத்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இந்நிலையில், உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக இளம் வீரர் நவ்தீப் சைனி அணியில் இடம்பெற்றார்.

Jadeja-2

டேவிட் வார்னர் மற்றும் ஸ்டார்க் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நவதீப் சைனி பலரால் பாராட்டப்பட்டார். முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டை வீழ்த்தி எதற்காக பாராட்டு பெற்றாலும் இவரது பந்து வீச்சுக்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நவதீப் சைனி டி20 போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிகளிலும் ரன்களை அள்ளிக் கொடுக்கிறார். சைனியின் ஓவர்களை பயன்படுத்திக்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் சிறந்த பார்மிருக்கு வந்தடைந்தனர்.

Saini 1

அதுமட்டுமின்றி இவர் கிட்டத்தட்ட 8 பவுன்சர்கள் வீசி இருக்கிறார். பவுன்சர்களை முயற்சித்து நோ பால்களையும் வீசுகிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் சைனியின் ஓவரில் சிக்ஸர் ஒன்றை விளாசி இருக்கிறார். அணியில் இருக்கும் அனைவரும் சைனிக்கு அறிவுரை கூறியும் சைனி தனது பந்துவீச்சை மாற்றவில்லை. சைனி 13 ஓவர்கள் வீசி 65 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement