உண்மையான மாஸ்டர் பிளாஸ்டர் நீங்கள் தான் அண்ணா. வாழ்த்துக்களை தெரிவித்த நட்டு – வைரலாகும் வாழ்த்து செய்தி

Nattu

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 தொடர் தற்போது முடிவடைந்திருக்கிறது. இந்த டி20 தொடரில் 38 அணிகள் பங்குபெற்று விளையாடியது. இந்த உள்ளூர் டி20 தொடர் ஜனவரி 10ம் தேதியில் இருந்து கோலாகலமாக நடைபெற்றது. இந்த 38 அணிகளை எலைட் குரூப் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் பிளேட் குரூப் என ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றது.

tamilnadu

இந்த 38 அணிகளில் தமிழ்நாடு மற்றும் குஜராத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் தமிழ்நாடு அணி இந்த தொடரில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் வெற்றியை மட்டும் பெற்று சிறப்பாக விளையாடி இருக்கிறது. இந்த தமிழ்நாடு அணியை இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றியை பெற்றது.

இரண்டாவது முறையாக சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழக அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வீரரான நடராஜனும் தமிழக அணியின் இந்த வெற்றியை பாராட்டி இருக்கிறார்.ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் “சையது முஷ்டாக் அலி டி20 கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு அணியின் இந்த மாபெரும் வெற்றியை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றிக்கு தமிழக வீரர்களின் கடுமையான முயற்சி தான் காரணம். குறிப்பாக நம் தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அண்ணா சிறப்பாக செயல்பட்டார். அவர் தான் உண்மயான மாஸ்டர் தி பிளாஸ்டர்” என்று நடராஜன் ட்வீட் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கு தினேஷ் கார்த்திக் “நன்றி நட்டு. நீ அணியில் இல்லாதது தான் வருத்தமாக இருக்கிறது. நீ தற்போது அடைந்திருக்கும் உயரத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இளம் வீரர்களுக்கு நீ ஒரு முன்னுதாரணம் இருக்கிறாய்” என்று பதில் ட்வீட் செய்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.