இந்த 3 பேருக்கு பதிலாக நடராஜன் டி20 மற்றும் ஒருநாள் என இரு தொடரிலும் விளையாடுவார் – கோலி வைத்திருக்கும் யோசனை

Nattu

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் உடனே மீண்டு வந்து இரண்டாவது டெஸ்டை இந்திய அணி அபாரமாக வென்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் அடித்த 161 , அஸ்வின் அடித்த சதம், பவுலிங்கில் அஸ்வின் மற்றும்அக்சர் எடுத்த 5 விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

axar 1

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடராஜனை களமிறக்க கோலி முடிவு செய்துள்ளார். அதன்படி தற்போது மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பும்ரா ஆடுவார். அதன்பின் அவருக்கு டெஸ்ட் உலகக் கோப்பை தொடருக்காக ஓய்வு கொடுக்கப்படும். பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அணியில் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் திரும்ப வருவார்கள்.

இதில் சைனியை நம்பி களமிறக்க முடியாது. அதேபோல் ஷமி காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் டி20 போட்டிகளில் மட்டுமே பவுலிங் செய்வார். புவனேஷ்வர்குமார் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். இதனால் ஒருநாள் அணியில் புவனேஷ்வர்குமார், நடராஜன், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் பவுலிங் செய்ய உள்ளனர். டி20 அணியில் முகமது ஷமி, நடராஜன், ஷர்த்துல் தாக்கூர் ஆகியோர் ஆட உள்ளனர் என்று கூறப்படுகிறது.

Nattu-1

இதில் பும்ராவிற்கு மாற்றாக நடராஜன் இரண்டு அணியிலும் ஆடுவார். முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்த்துல் தாக்கூர் யாருக்குமே இந்திய அணியில் இந்த இரண்டு பார்மெட்டிலும் ஆட வாய்ப்பு இல்லை. இவர்கள் மூன்று பேருக்கு பதிலாக நடராஜன் மட்டுமே இரண்டு பார்மெட்டிலும் ஆடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Nattu

நடராஜனை இந்தாண்டு நடக்கயிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்த விராட் கோலி திட்டமிட்டுள்ளார். இதனால் அதற்கு முன் சர்வதேச போட்டிகளில் நடராஜனை ஆட வைக்க கோலி முடிவு செய்துள்ளார்.அவரது ஆட்த்தை அதில் வைத்து கணக்கிட போவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்கிறார்கள்.