நான் பேட்டிங் பண்ணும்போது இவர் வீசுன பந்து கண்ணுக்கே தெரியல. அவ்ளோ ஸ்பீடா வருது – மனம்திறந்த நடராஜன்

ashwin

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் மூன்று வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக இடம்பிடித்த நடராஜன் டி20 போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி அடைந்த காயம் காரணமாகவும், ஒருநாள் போட்டிகளில் நவ்தீப் சைனி அடைந்த காயம் காரணமாகவும் இந்திய அணிக்காக அறிமுகமாகி அசத்தினார். இந்த இரண்டு வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடராஜன் 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சிறப்பான துவக்கத்தை அளித்தது மட்டுமின்றி தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

nattu 1

இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நெட் பவுலராக செயல்படுவார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்து அவரை ஆஸ்திரேலியாவில் தங்கவைத்தது இந்நிலையில் தற்போது இந்த டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட பல்வேறு வீரர்களின் தொடர் காயம் காரணமாக நான்காவது போட்டியில் விளையாட தமிழக வீரர்களான நடராஜனுக்கும், சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படி துவங்கி நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவருமே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் 3வது போட்டியில் அடைந்த காயம் காரணமாக இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருக்கும் அஸ்வின் நேற்று தொகுப்பாளராக மாறி இந்திய அணியின் வீரர்களான சுந்தர், நடராஜன், ஷர்துல் தாகூர் ஆகியோரை பேட்டி கண்டார். அந்த பேட்டியில் நடராஜனிடம் அஸ்வின் நெட் பவுலராக இருந்த நீங்கள் இப்போது நட்டுவாக மாறி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளீர்கள் இந்த அனுபவம் எப்படி உள்ளது என்று கேட்டார். அதற்கு தமிழிலேயே பதிலளித்த நடராஜன் :

ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என்று நான் எதிர்பார்க்கல. நெட் பவுலரா இருந்து முடித்து விட்டு செல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மூலமா எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று நடராஜன் தமிழிலேயே தனது பதிலை அளித்தார். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பி.சி.சி.ஐ சேனலுக்கு அஷ்வின் தொகுத்து வழங்கினார்.

- Advertisement -

starc

மேலும் இந்த போட்டியின் போது நடராஜன் பேட்டிங் செய்ததையும் மிச்செல் ஸ்டார்க்கு எதிராக சிறப்பாக ஆடினீர்கள் அவருடைய பந்தினை எதிர்கொள்ளும் போது எப்படி இருந்தது என்று சற்று ஜாலியாக நடராஜனிடம் அஸ்வின் ஒரு கேள்வி ஒன்றினை கேட்க அதற்கு பதிலளித்த நடராஜன் : அவர் வீசிய பந்து உண்மையிலேயே எனக்கு தெரியல என்று சிரித்துக்கொண்டே கூறினார். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சர்வதேச உலகில் அதிவேக பந்து வீச்சாளரான ஸ்டார்க்கின் வேகத்தால் பந்து கண்ணுக்கே தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.