இந்திய அணியில் விளையாட இருக்கும் யார்க்கர் கிங் நட்டு – அதிர்ஷ்டம் எந்த வழியில் வந்திருக்கு பாருங்க

Nattu 1

நவம்பர் 10ஆம் தேதி இந்த வருடத்தின் ஐபிஎல் தொடர் முடிவடைகிறது. பல சிக்கல்களுக்கு இடையே சிறப்பாக நடைபெற்று முடிய இருக்கும் இந்த தொடருக்கு பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்காக மூன்று வகையான இந்திய அணியும் ஏற்கனவே பி.சி.சி.ஐ யால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

INDvsAUS

அந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா பயணிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடரானது நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மிகப்பெரிய தொடராக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணியும் தற்போது துபாயில் முகாமிட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இந்த ஐபிஎல் தொடரில் கலங்கிய தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான சக்கரவர்த்தி இடம் பிடித்திருந்தார்.

Varun-chakravarthy

ஆனால் தற்போது அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இருந்த நடராஜன் தற்போது டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார். சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது நடராஜனுக்கு இந்திய அணியில் விளையாடும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் விளையாட விட வேண்டும் என்ற ஆசை இருப்பதாக நடராஜன் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

Nattu-2

இந்நிலையில் தற்போது அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் அவர் 3 டி20 போட்டியில் ஒரு போட்டியிலாவது விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் தமிழக வீரர் ஒருவர் காயமடைந்து அவருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரராக நீல நிறத்தில் நடராஜன் இந்திய அணிக்கு விளையாடுவதை பார்ப்பதற்கு தமிழக ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருப்பதாகவும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.