இந்திய ஒருநாள் தொடருக்கான அணியிலும் சேர்க்கப்பட்ட நடராஜன். காரணம் இதுதான் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Nattu
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அசாத்தியமான பந்து வீச்சை வெளிப்படுத்திய தமிழக வீரர் நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின் ஆரம்பத்தில் கூடுதல் பந்துவீச்சாளராக இந்திய அணியில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு கூடுதல் பந்துவீச்சாளர் இடத்தில் இருந்து வருண் சக்கரவர்த்தி அடைந்த காயம் காரணமாக டி20 இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Nattu-2

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலிலும் அவரது பெயர் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும் இதற்கான சரியான காரணத்தையும் பி.சி.சி.ஐ தெளிவாக விளக்கியுள்ளது.

அதன்படி இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி முதுகுவலியால் அவ்வப்போது சிரமப்பட்டு வருவதால் அவருக்கு பாதிப்பு ஏற்படும் நேரத்தில் மாற்று வீரராக தமிழக வீரர் நடராஜன் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார் என்று சரியான தகவலை வெளியிட்டுள்ளது.

Nattu

மேலும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முழு உடல்தகுதி எட்டாததால் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Nattu

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி அணிக்காக விளையாடிய நடராஜன் சிறப்பாக விளையாடி 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதிலும் அவர் எடுத்த விக்கெட்டுகள் அனைத்துமே தோனி, கோலி, ஏ.பி.டி, ரசல் போன்ற பெரிய பெரிய வீரர்களின் விக்கெட்டுகள். அதுமட்டுமின்றி துல்லியமாக யார்க்கர் வீசும் அவரது இந்த திறனே இந்திய அணியில் அவருக்கு இடத்தைப் பெற்றுத்தந்துள்ளது என்றும் கூறலாம்.

Advertisement