ஆஸி தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை என்றாலும் இந்திய அணியுடன் பறக்கும் யார்க்கர் கிங் நட்டு – காரணம் இதுதான்

Nattu-2
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் வரும் நவம்பர் 10ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்தவுடன் நேராக இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்ற விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட், டி20, ஒரு நாள் போட்டிகளுக்கான 3 அணியையும் அறிவித்த பிசிசிஐ ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் மொத்த அணி வீரர்களின் விவரத்தையும் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூடுதலாக நான்கு வேகப்பந்து வீச்சாளராக வீச்சாளர்களை ஆஸ்திரேலிய அனுப்பவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் அந்த நான்கு கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக கமலேஷ் நகர்கோடி, கார்த்திக் தியாகி, இசான் போரல் மற்றும் தமிழக வீரரான நடராஜன் ஆகியோரை ஆஸ்திரேலிய அனுப்பி வைக்கிறது பிசிசிஐ இதற்கு காரணம் யாதெனில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலைபயிற்சியின்போது வந்து வீசுவதும் அதுமட்டுமின்றி இந்தத் தொடர் இரண்டு மாத கால அளவில் நடைபெற இருக்கும் பெரிய தொடர்.

இதனால் தொடரின் இடையே ஏதாவது வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போகும் பட்சத்தில் அவர்களுக்கு பதிலாக இந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் அணியில் தேர்வாகவும் வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடராஜனுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்பது கூடுதல் சுவாரஸ்யமான விஷயமாகும்.

nattu

சேலத்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான யார்க்கர் கிங் நடராஜன் இந்த ஐ.பி.எல் தொடரில் சர்வதேச பேட்ஸ்மேன்களை தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் கதிகலங்க வைத்தார். நிச்சயம் இவர் இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் பி.சி.சி.ஐ இவருக்கு கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அணியில் இணைய வாய்ப்பளித்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement