தனக்கு காரை பரிசாக அளித்த ஆனந்த் மஹிந்திராவுக்கு மீண்டும் பரிசளித்த நட்டு – என்ன பரிசு தெரியுமா ?

Nattu

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கடந்த ஐபிஎல் தொடரின்போது சன்ரைஸ் அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பவுலராக இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவிற்கு நெட் பவுலராக சென்ற நடராஜன் அங்கு வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாகி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Nattu

மேலும் அந்த ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இளம் வீரர்களில் நடராஜன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமின்றி இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் அந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரையும் அசத்தலாக இந்திய அணி கைப்பற்றியது. அப்போது இந்திய அணியில் இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, சுப்மன் கில், சிராஜ் ஆகியோர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக முதன்முறையாக அறிமுகம் ஆகி இருந்தனர்.

இதனால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மஹிந்திரா இந்த ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான அனைத்து இளம் வீரர்களுக்கும் மஹிந்திரா தார் என்கிற ஒரு காரை பரிசாக அளிப்பதாக அறிவித்திருந்தார்.

nattu 2

கடந்த ஜனவரி மாதம் அறிவித்தபடி எல்லோருக்கும் சில தினங்களுக்கு முன்னர் கார் பரிசாக அளிக்கப்பட்டது. அப்படி பரிசாக பெற்ற காருடன் புகைப்படத்தை எடுத்துக்கொண்ட நடராஜன் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி தான் பரிசாக பெற்ற அந்த காரினை தனது பயிற்சியாளரும், நலம் விரும்பியுமான ஜெய்பிரகாஷிற்கு பரிசாக அளித்தார்.

- Advertisement -

இந்நிலையில் தனக்கு காரை பரிசாக அளித்த ஆனந்த் மகேந்திராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் அறிமுக டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய இந்திய அணியின் டீ-சர்ட்டை ஆனந்த் மஹிந்திரா அவருக்கு தனது கையெழுத்திட்டு நடராஜன் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் அது குறித்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் : இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பாக்கியம்.

அற்புதமான நபர்களின் ஆதரவும், ஊக்கமும் என்னை எனக்கு நல்ல வழிகளை கண்டறிய உதவுகிறது என்று நடராஜன் கையொப்பமிட்ட அந்த டிஷர்ட்டைப் ஆனந்த் மஹிந்திரா விற்கு அனுப்பியுள்ளார் நடராஜன். விலைமதிப்பில்லாத இந்த இந்திய அணியின் டி-ஷர்ட்டை ஆனந்த் மஹிந்திரா விற்கு அனுப்பிய நடராஜனின் இந்த பரிசுக்காக ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.