ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் வீரர்கள் கொண்டாட்டம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த டி20 தொடரில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் நடராஜன் 3 போட்டியில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி அனைவரையும் தனது திறமையால் ஈர்த்துள்ளார். மாற்று பவுலராக அணியில் இணைந்த நடராஜன் இந்த தொடர் முழவதும் விளையாடி தவிர்க்க முடியாத பவுலராக மாறியுள்ளார்.
இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் முன்னணி வீரரான ஹார்திக் பாண்டியா மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் செய்த செயல் ரசிகர்களை நெகிழ வைத்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் முதலில் தொடர் நாயகன் விருதை பெற்ற ஹர்டிக் பாண்டியா நேரடியாக அந்த தொடர் நாயகன் கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து அவருடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
அதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் கோலியும் டி20 தொடரில் வெற்றி கோப்பையை பெற்ற பின்னர் அதனை நேராக கொண்டுவந்து நடராஜன் கையில் கொடுத்து வெற்றியை கொண்டாடுமாறு கூறி ஒரு ஓரத்தில் நின்றார். இந்திய அணி கோப்பையை வைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது கூட நடராஜன் இடமே இந்த இரண்டு கோப்பைகளும் இருந்தன. இந்திய அணி வீரர்களின் நடுவில் நடராஜன் அமர மற்ற வீரர்கள் அனைவரும் சுற்றி நின்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்த தொடரில் தொடர் நாயகன் விருது கிடைக்கும் என்ற என்று எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் சற்று ஏமாற்றத்தை அடைந்தாலும் இந்திய வீரர்களில் ஊக்கத்தினால், ரசிகர்களின் ஆதரவினாலும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். மேலும் கோலி, பாண்டியா ஆகியோர் தங்களது கோப்பைகளை பகிர்ந்துகொள்ள நடராஜன் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொண்டாடினர். ஐபிஎல் தொடர் முடிந்து நெட் பவுடராக ஆஸ்திரேலியா சென்ற நடராஜன் 2 வீரர்களில் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பிடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
அதுமட்டுமன்றி இனிவரும் தொடர்களிலும் அவர் தவிர்க்க முடியாத ஒரு பவுலராக இந்திய அணியில் திகழ்வார் என்பதில் ஐயமில்லை. மேலும் அடுத்து வரும் பல தொடர்கள் மட்டுமின்றி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் நடராஜன் தேர்வாகி விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட் நிபுணர்களின் விருப்பமாகவும், நமது தமிழ் ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது. சேலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இன்று உலகமே போற்றும் அளவிற்கு உயர்ந்து இருக்கும் நடராஜன் இன்னும் புகழின் உச்சத்திற்கு செல்ல எங்களது வாழ்த்துக்கள்.