கடைசி ஒருநாள் போட்டி : எதிர்பார்த்த படியே சொதப்பல் மன்னனை வெளியில் அனுப்பிய கோலி – விவரம் இதோ

Kohli

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலிரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

toss

சற்றுமுன்னர் டாஸ் போடப்பட்ட பிறகு டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் போட்டியில் அசத்தலாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது போட்டியில் பவுலிங்கில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த இரு போட்டிகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த சொதப்பல் மன்னனான குல்தீப் யாதவை அணியிலிருந்து நீக்கியுள்ளார் விராட் கோலி மேலும் அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் விளையாடுவார் என்று தெரிவித்தார்.

Nattu-1

அவரின் இந்த முடிவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. ஏனெனில் குல்தீப் தொடர்ந்து சொதப்பி வரும் வேளையில் அவருக்கு வாய்ப்பளிப்பதை விட தற்போது இந்த தொடரின் முக்கியமான இறுதிப்போட்டியில் நடராஜனை இடம் பெற வைத்தது சரியான முடிவு என்று தெரிவித்து வருகின்றனர். இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் அணி இதோ :

- Advertisement -

Kuldeep

1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவான், 3) விராட் கோலி, 4) கே.எல்.ராகுல், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) ஷர்துல் தாகூர், 10) நடராஜன், 11) பிரசித் கிருஷ்ணா.