ஒருநாள் தொடரில் பும்ராவின் ஓய்வினால் தமிழக வீரர் நடராஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Nattu-4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியாக இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதே வேளையில் இரண்டு தொடர்களையும் கைப்பற்றிய இந்திய அணி இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றி இங்கிலாந்து அணியை வீழ்த்த முயற்சிக்கும்.

indvseng

- Advertisement -

இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது இந்திய அணியில் அதிக அளவு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் நாளை ஒருநாள் போட்டியில் எந்த வீரர்கள் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும் பந்துவீச்சை பொறுத்தவரை எந்தெந்த பவுலர்கள் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஏனெனில் இந்திய அணியில் பும்ரா தனது திருமண விடுப்பு காரணமாகவும், ஷமி காயம் காரணமாகவும் வெளியேறியுள்ளதால் பவுலிங் யூனிட்டிற்கு புவனேஸ்வர் குமார் தலைமை ஏற்பார் என்றும் பும்ராவின் இடத்தை நிரப்ப தமிழக வீரர் நடராஜன் விளையாடுவார் என்றும் தெரிகிறது. இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் இவர் பும்ராவின் இடத்தில் விளையாடுவார் என்று தெரிகிறது.

மேலும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூர் விளையாடுவார். ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் அவருடைய நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று டி20 தொடர் முடிந்து பாராட்டிப் பேசி இருந்த கேப்டன் கோலி நிச்சயம் தாகூருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவார் என்பதால் அவரும் இத்தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும், சாஹல் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாகவும் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Nattu

எது எப்படி இருப்பினும் ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் நாடு திரும்பிய நடராஜனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் தற்போது பும்ராவின் விடுப்பு காரணமாக இந்த ஒரு நாள் தொடர் முழுவதும் நடராஜன் விளையாடுவார் என்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement