உள்ளாடையில் தனது புகைப்படத்தை பிரிண்ட் செய்து அணிந்து வந்த ஆஸ்திரேலிய வீரர் – விமர்சிக்கும் ரசிகர்கள்

Lyon

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர் என மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்றுவிட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கின்றன. இந்நிலையில் இந்த ஜனவரி 7ஆம் தேதி நடைபெற போகும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றன.

குறிப்பாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் நடைபெறுவதால் மூன்றாவது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று இந்த தொடரில் முன்னிலை பெற வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி கடுமையாக பயிற்சி இது வருகிறது. அதேவேளையில் கடந்த முறை பெற்ற வெற்றியை தக்கவைக்க இந்திய அணியும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக ஆஸ்திரேலிய வீரர்கள் சர்ச்சைக்கு பெயர் போனவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த முறை இது சற்று மோசமாக சென்றுவிட்டது. 2வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லையன் ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை செய்திருக்கிறார் அணியில் சீனியர் வீரராக இருக்கும் அவர் தனது புகைப்படம் அணிந்த ஒரு உள்ளாடையை மைதானத்திற்குள் அணிந்து வந்திருக்கிறார். அது தெரியும் வண்ணம் கேமராவின் முன்னரும் காட்டியிருக்கிறார்.

lyon

இது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது ஒரு சீனியர் வீரராக இருந்து கொண்டு இப்படி அநாகரிகமாக செயலை பொதுத்தளத்தில் செய்யலாமா என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்கள் வழக்கமாக வித்தியாசமாகவும் சர்ச்சைக்குள்ளாகும் வகையிலும் இப்படி ஏதாவது செய்வது வழக்கம் ஆனால் இந்த முறை அது எல்லையை மீறி சென்று விட்டது என்பதை நாம் அறியலாம்.

- Advertisement -

lyon 2

இப்படி உள்ளாடைக்கு கொடுக்கும் கவனத்தை உங்களது ஆட்டத்தில் கொஞ்சம் கொடுங்கள் என்று இந்த செயலை கண்ட ரசிகர்கள் அவரை சற்று கடுமையாக விமர்சித்து இந்த பதிவை வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.