இந்திய வீரரான இவரை வீழ்த்துவதே என்னுடைய முதல் வேலை – சவால் விட்டு பேசிய நாதன் லயன்

Lyon
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எளிதாக வீழ்த்தி அசத்தியது. அதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளது.

Gill

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பதால் அதற்காக கடுமையாக பயிற்சி செய்து வருகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியும் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் பெரிய அளவில் சிறப்பாக பந்துவீசவில்லை.

இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் இந்த போட்டியில் தான் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் நாதன் லயன் தற்போது பேட்டி ஒன்றினை பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையிலேயே ரோகித் உலகின் நம்பர் ஒன் வீரராக உள்ளார். இதனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அவரை சமாளிப்பது சற்று கடினமான சவாலாக இருக்கும்.

Rohith

ஆனாலும் நாங்கள் எங்கள் வழியில் ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம் நாங்கள் சவாலை விரும்பி ஏற்கிறோம். இந்திய அணிக்கு பேட்டிங்கில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து விளையாடக்கூடியர் ரோஹித் தான் ஆகையால் அவரை யாரும் வெளியேற்றுவார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும்.

Rohith

ஆனால் நான் ரோகித் சர்மா இருக்காங்க திட்டத்தை வகுத்து அதன்படி முன்னதாகவே அவரது விக்கெட்டை வீழ்த்துவேன் என நம்புகிறேன். அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கு மரியாதை கொடுத்தாக வேண்டும் என்று லயன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement