ஆஸ்திரேலியாவில் இருந்து அஷ்வினுக்கு சப்போர்ட் செய்த நட்சத்திர வீரர் – விவரம் இதோ

Lyon

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. மேலும் போட்டி இரண்டே நாளில் முடிவுற்றதும், இந்த மைதானம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததாலும் இந்த மைதானம் குறித்து பெரிய அளவில் சர்ச்சை வெடித்துள்ளது.

மேலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்காகவே இந்த மைதானம் அவர்களுக்கு சாதகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசமான மைதானத்தின் தன்மை காரணமாக தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் ஐசிசி இடம் முறையிடும் அளவிற்கு இந்த விவகாரம் சூடு பிடித்தது. இந்நிலையில் இந்த பிட்ச் குறித்து தற்போது வரும் புகார்களுக்கு முதல்முறையாக அஸ்வின் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

அகமதாபாத் பிட்ச் மீது இங்கிலாந்து அணிக்கு கோபம் இருப்பதாக தெரியவில்லை. வெளியில் இருக்கும் பலர் இந்த பிட்ச் மோசமானது என புகார் வைக்கிறார்கள். நாங்கள் எப்போதும் இதுபோல பிட்ச் மீது புகார் வைத்தது கிடையாது. எந்த ஆடுகளம் எங்களுக்கு வழங்கப்படுகிறதோ அந்த மைதானத்தில் தான் நாங்கள் விளையாடுகிறோம் என்று அஸ்வின் குறிப்பிட்டிருக்கிறார்.

IND

இந்நிலையில் அஸ்வின் மைதானம் குறித்து பேசி உள்ள இந்த கருத்திற்கு ஆதரவாக தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அகமதாபாத் பிட்சை ஏன் விமர்சனம் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருந்தால் அதை ஏன் விமர்சனம் செய்கிறார்கள் ? மேலும் பிட்ச் மீது ஏன் தவறு சொல்கிறார்கள் ? என்று எனக்கு தெரியவில்லை.

- Advertisement -

axar

பாஸ்ட் பவுலிங்க்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டால் இது போன்று யாரும் குறை சொல்வதில்லை. பேட்டிங் பிட்ச் அமைக்கப்பட்டு அது மோசமான பிட்ச் என்று யாரும் சொல்லவில்லை. அதேவேளையில் ஸ்பின் பவுலிங்க்கு ஏற்றவாறு மைதானம் தயார் செய்யப்பட்டால் அதை இப்படியா விமர்சனம் செய்வது இதெல்லாம் தவறு. அஸ்வின் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சரியானவை என்று நாதன் லயன் கூறியது குறிப்பிடத்தக்கது.