டெஸ்ட் போட்டிகளில் கோலியை விட இவரே பெஸ்ட். டிராவிட்க்கு அடுத்து இவர்தான் – புகழ்ந்து தள்ளிய ஆஸி வீரர்

Lyon
- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

Lyon

- Advertisement -

இதனால் இந்திய வீரர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தற்போது தங்கள்து ஓய்வு நேரத்தை தங்களது வீட்டில் கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அதுமட்டுமின்றி தங்களது வாழ்வில் நடந்த சுவாரசிய நிகழவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி தற்போது இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடர் குறித்து தற்போது தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். அதில் அந்த தொடர் குறித்த சில விடயங்களை வெளிப்படுத்தினார்.

lyon 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டன் கோலி எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதில் சிறந்தவர். நான் மிச்செல் ஸ்டார்க் உடன் இது குறித்து பேசிய போது மைதானத்தில் ரசிகர்களே இல்லை என்றால் கோலி எப்படி செயல்படுவார் என்பதை காண அதிக ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த லயன் இந்திய அணி குறித்து நிறைய விடயங்களை பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி வீரர்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கோலி இந்தியாவின் உச்ச வீரராக கோலி திகழ்கிறார். டெஸ்ட் போட்டிகளில் பார்க்கும் பட்சத்தில் கோலியை விட புஜாராவை வீழ்த்துவது தான் கடினமான விஷயம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pujarashot

இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் டெஸ்ட் போட்டிகளில் கோலியை பற்றி பலரும் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் புஜாரா இந்திய அணியின் ஒரு சுவர். டிராவிட்டுக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த புதிய சுவர் என்றே கூறலாம். கடந்த முறை ஆஸ்திரேலியா வந்த போது மிகச் சிறப்பாக விளையாடி சூழ்நிலைக்கு ஏற்றார்போல் அவரது ஆட்டம் மாற்றிக்கொண்டார். அவருக்கு சில அதிர்ஷ்டங்கள் உண்டு இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. அப்போது புஜாராவை வீழ்த்துவதே எங்கள் திட்டமாக வைத்துள்ளோம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement