- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி கிடையாது.. ஆஸ்திரேலியாவில் அந்த இந்திய வீரரை சாய்க்க பிளான் பண்றேன்.. நேதன் லயன் பேட்டி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – காவாஸ்கர் கோப்பை 2024/25 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் துவங்க உள்ளது. காலம் காலமாக ஆஸ்திரேலிய மண்ணில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வென்றது.

அதே போல 2020/21 தொடரின் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா அங்கிருந்து கம்பேக் கொடுத்து 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்திய வரலாறு படைத்தது. அந்த வரிசையில் ஆஸ்திரேலிய மண்ணில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

- Advertisement -

இப்போதே திட்டம்:
மறுபுறம் இந்தியாவை இம்முறை தோற்கடிக்க முழு வீச்சில் தயாராகும் ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம் போல விராட் கோலி சவாலை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் தரமான இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 712 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

எனவே அவரை சாய்க்க இப்போதே திட்டங்களை வகுத்து வருவதாக ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நேதன் லயன் தெரிவித்துள்ளார். அதற்கு இங்கிலாந்து ஸ்பின்னர் டாம் ஹார்ட்லியிடம் ஆலோசனைகளை கேட்டதாகவும் தெரிவிக்கும் லயன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வாலுக்கு எதிராக இன்னும் நான் விளையாடவில்லை. ஆனால் எங்கள் பவுலர்களுக்கு அது மிகப்பெரிய சவாலாக இருக்கும்”

- Advertisement -

“இங்கிலாந்துக்கு எதிராக அவர் விளையாடிய விதத்தை நான் நெருக்கமாக பார்த்தேன். அது கொஞ்சம் அற்புதமாக இருந்தது. அத்தொடரில் ஜெய்ஸ்வால் பல்வேறு வழிகளில் விளையாடியதைப் பற்றி நான் டாம் ஹார்ட்லியிடம் பேசினேன். அது கொஞ்சம் ஆர்வமாக இருந்தது. அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அறியாதவற்றை பற்றி பேசுவதற்கு நான் எப்போதும் விரும்புவேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நடராஜனுக்கு அநியாயம் நடக்கல.. இதனால தான் துலீப் கோப்பையில் பிசிசிஐ செலக்ட் பண்ணல.. அஸ்வின் பேட்டி

அவர் கூறுவது போல இங்கிலாந்து தொடரின் 2வது போட்டியில் ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைவருமே தடுமாற்றமாக விளையாடினர். ஆனால் அப்போது தனி ஒருவனாக இரட்டை சதமடித்த ஜெய்ஸ்வால் இந்தியா கம்பேக் கொடுத்து வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அதை விட இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக அவர் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு மிரட்டலாக விளையாடியது அனைவரது பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -