ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களிலும் முதல் முறையாக வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. எனவே இம்முறை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போல இந்தியாவை தோற்கடிக்க ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது.
மறுபுறம் சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் சந்தித்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்பின்னர் நேதன் லயன் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேதன் லயன் சேலஞ்ச்:
இந்நிலையில் இந்தத் தொடரில் இந்தியாவின் சிறந்த வீரரான விராட் கோலியை அவுட்டாக்க தமக்கு தாமே சவால் விடுத்துள்ளதாக நேதன் லயன் தெரிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்திடம் தோற்றாலும் இப்போதும் இந்தியா ஆபத்தான அணி என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் சாதனைகளை பாருங்கள். ஒட்டு மொத்தமாக அவருடைய புள்ளிவிவரங்களையும் பாருங்கள்”
“அவரைப் போன்ற சாம்பியன் வீரர்களை நீங்கள் முடிந்தவர்களாக எழுத முடியாது. விராட் கோலியின் மீது மரியாதை தவிர்த்து என்னிடம் வேறு எதுவும் இல்லை. அதே சமயம் அவரை நான் அவுட்டாக்க விரும்புகிறேன் என்று சொல்வதில் ஒளிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் அது சவாலாகும். அவரும் ஸ்டீவ் ஸ்மித்தும் கடந்த தசாபத்தில் சகாப்தத்தில் விளையாடிய 2 சிறந்த பேட்ஸ்மேன்கள்”
சிறந்த இந்திய அணி:
“அவருக்கு எதிராக கடந்த காலங்களில் நிறைய முறை போட்டியிட்டது சிறந்த விஷயமாகும். இந்திய அணி முழுவதுமாக சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த ஆபத்தான அணியாகும். அவர்களிடம் நிறைய அனுபவமும் இருக்கிறது. அதே சமயம் இளம் வீரர்களும் கொண்ட அவர்களை முடிந்தவர்களாக உங்களால் எழுத முடியாது. நியூசிலாந்துக்கு எதிராக அவர்கள் சந்தித்த தோல்வி எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது”
இதையும் படிங்க: சுப்மன் கில் வெளியேறியதால் அவரது 3 ஆவது இடத்தில் விளையாடப்போகும் வீரர் யார் தெரியுமா? – விவரம் இதோ
“ஆனால் இந்தியாவுக்கு எதிராக நான் நீண்ட வருடங்கள் விளையாடியுள்ளேன். அதனால் அந்த தோல்வியையும் தாண்டி அவர்கள் எங்களுக்கு எதிராக நல்ல போட்டியை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் வீரர்கள் நிறைந்த அணிகள் மோதும் இந்த தொடர் ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற உள்ளது.



