இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஃகால் நகரில் ஜனவரி 29ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 654-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா இரட்டை சதத்தை அடித்து 232 ரன்கள் குவித்தார்.
அவருடன் விளையாடிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 10000 ரன்கள் கடந்து 141 ரன்கள் குவித்தார். அறிமுகப் போட்டியில் மிரட்டிய ஜோஸ் இங்லீஷ் சதத்தை அடித்து 102 ரன்கள் எடுத்தார். இலங்கைக்கு அதிகபட்சமாக ஃஜெப்ரி வாண்டர்சே, பிரபத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இலங்கை மிகவும் சுமாராக பேட்டிங் செய்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அரிதான சாதனை:
அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5, நேதன் லயன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் ஃபாலோ ஆன் பெற்று விளையாடிய இலங்கை மீண்டும் சுமாராகவே பேட்டிங் செய்து 247 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜெஃப்ரி வேண்டர்சே 53 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மேத்யூ குனேமான் 4, நேதன் லயன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதன் காரணமாக இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக தங்களுடைய பெரிய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
அஸ்வினை முந்திய லயன்:
முன்னதாக இந்தப் போட்டியின் 4வது நாளில் 132-5 என்ற நிலையில் இலங்கை தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. அப்போது காலை 10.13 மணிக்கு தினேஷ் சந்திமலை ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் அவுட்டாக்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் இலங்கையை சுருட்டிய ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் கொடுத்தது.
இதையும் படிங்க: இதே ரூல்ஸ் வெச்சு நியூஸியிடம் 2 ஏமாற்றம் செஞ்சு.. 2019 உ.கோ பறித்ததை விடாவா மோசம்.. இந்திய ரசிகர்கள் பதிலடி
தொடர்ந்து விளையாடிய இலங்கைக்கு நண்பகல் 12.03 மணிக்கு சந்திமலை மீண்டும் லயன் அவுட்டாக்கினார். இதன் வாயிலாக 2 மணி நேரத்திற்குள் ஒரே செஷனில் 2 முறை ஒரு பேட்ஸ்மேனை அவுட்டாக்கி நேதன் லயன் அரிதான சாதனை படைத்துள்ளார். இது போக இலங்கை மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நேதன் லயன்: 39*
2. ரவிச்சந்திரன் அஸ்வின்/சயீத் அஜ்மல்: தலா 38
3. ஷேன் வார்னே: 37



