டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்து வரலாறு படைத்த ஆஸி வீரர் – விவரம் இதோ

Ellis
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை கைப்பற்றிய வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை உடன் நேற்றைய மூன்றாவது டி20 போட்டியில் விளையாடியது. நேற்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் குவித்தது.

ellis 3

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆனது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே குவித்ததால் 10 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி மீண்டும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது மிச்செல் ஸ்டார்க்கு பதிலாக அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் தனது அறிமுக போட்டியிலேயே டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைக்காத வரலாற்று சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

ellis 2

அந்த சாதனை யாதெனில் இந்த போட்டியின் 20 ஆவது கடைசி ஓவரை வீசிய அவர் நான்காவது, ஐந்தாவது மற்றும் கடைசி பந்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

ellis 1

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் இதுவரை எந்த ஒரு பவுலரும் டி20 கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது இல்லை. அந்த ஒரு வரலாற்று சாதனையை தற்போது ஆஸ்திரேலிய அணியின் வீரரான நாதன் எல்லிஸ் படைத்துள்ளார். அவரின் இந்த சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement