ஐ.பி.எல் தொடரில் இருந்து தீடீரென வெளியேறிய நட்சத்திர வீரர் – முன்னணி அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

RR
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருவதால் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்பதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அனைத்து அணிகளும் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதன்காரணமாக இந்தத்தொடரானது எதிர்பார்ப்பையும் மீறி ரசிகர்களை திருப்தி செய்து வருகிறது.

IPL 2022 (2)

- Advertisement -

இவ்வேளையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ராஜஸ்தான் அணி மிகப் பலம் வாய்ந்த அணியாக மாறி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஏனெனில் இதுவரை அவர்கள் விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள்.

வழக்கமாக ஐபிஎல் தொடர் என்றாலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் மிகவும் பின்தங்கியிருக்கும். ஆனால் இம்முறை பட்லர், ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹெட்மையர் என வலுவான பேட்டிங்கும், அஸ்வின், சாஹல், ட்ரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா என வலுவான பவுலிங்கும் உள்ளதால் தற்போது அனைத்து அணிகளுக்கும் சவால் விடும் வகையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.

Nathan-Coulter-Nile

இறுதியாக நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கூட வெற்றிக்கு அருகில் சென்று ராஜஸ்தான் அணி மிகச்சிறிய இடைவெளியிலேயே போட்டியை இழந்ததால் இனிவரும் போட்டிகளிலும் அந்த அணி பலமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அந்த அணியின் முக்கிய வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரான நாதன் குல்டர்நைல் இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது பவுலிங் செய்து கொண்டிருந்த அவர் தனது கடைசி ஓவரில் காலில் ஏற்பட்ட வலி காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு போட்டிகளாக அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி விளையாடி வந்தார். இந்நிலையில் அவரது காயத்திற்கான பரிசோதனை நடத்தப்பட்டபோது அவருக்கு இந்த காயம் குணமடைய நீண்ட நாட்களாகும் என்று தெரியவந்தது.

இதையும் படிங்க : என்னை மேட்ச் விளையாடவே விடமாட்டாங்கன்னு அவர் எனக்கு வார்னிங் கொடுத்தாரு – இஷான் கிஷன் ஓபன்டாக்

இதனால் அவரால் இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக அதிகாரபூர்வமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவரது இடத்திற்கு மாற்றாக தசுன் ஷனகா அல்லது பென் கட்டிங் ஆகிய இருவரில் ஒருவர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement