கடந்த சில வாரங்களாகவே இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஹார்டிக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நட்டாஷா ஆகியோர் பிரிய இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாக்கின. ஏனெனில் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் பாண்டியா மற்றும் நட்டாஷா தம்பதியினர் முறைப்படி விவாகரத்தும் பெற இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.
அப்படி விவாகரத்து பெரும்பட்சத்தில் நடாஷாவிற்கு ஹார்திக் பாண்டியாவின் 70 சதவீத சொத்துக்களை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூட தகவல்கள் பரவியது. அதோடு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு பாண்டியா தனியாக வெளிநாட்டிற்கு சென்று ஓய்வெடுத்ததாகவும் கூறப்பட்டது.
அதே வேளையில் ஐபிஎல் தொடரின் போது நடாஷா மைதானத்திற்கு நேரில் வராமல் இருந்ததோடு ஆண் நண்பருடன் பொதுவெளியில் தோன்றியதால் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்டாஷா ஆகியோர் பிரிய இருக்கிறார்கள் என்று அதிகளவு பேசப்பட்டது.
ஆனால் இருவரது தரப்பிலும் இது குறித்த எந்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியிருந்த நட்டாஷா தற்போது மீண்டும் சமூக வலைதளத்தின் மூலமே தனது விவாகரத்து குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அந்த வகையில் மீண்டும் பாண்டியா உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர் “அனைத்து பெருமைகளும் கடவுளுக்கு” என்று பதிவிட்டுள்ளார். அதில் பாண்டியாவுடன் திருமணமான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளதால் நிச்சயம் பாண்டியாவை அவர் பிரியப் போவதில்லை என்பதை அந்த புகைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க : 125 ரன்ஸ்.. 5 விக்கெட்ஸ்.. அறிமுகப் போட்டியிலேயே உகாண்டாவை சிதைத்த ஆப்கானிஸ்தான்.. பரூக்கி புதிய உலக சாதனை
அதோடு இந்திய அணி தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் அந்த டி20 போட்டிகளை பார்க்க அவர் நியூயார்க் செல்ல இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



