ஹார்டிக் பாண்டியாவின் காதலிக்கு முதல் காதல் இதனால் தான் முறிந்ததாம் – விவரம் இதோ

Aly-2

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ள பாண்டியா மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடவும் தயாராகி வருகிறார்.

aly

இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு தனது காதலியான நட்டாஷா ஸ்டேன்கோவிக் என்பவரை துபாயில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அவர்களின் நிச்சயதார்த்தத்தை மோதிரத்துடன் கூடிய புகைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வருகிறது. மேலும் பாண்டியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது புகைப்படத்தை பகிர்ந்து அவர்களது உறவினை உறுதி செய்தார்.

இந்நிலையில் தற்போது நட்டாஷா ஸ்டான்கோவிக் இந்தி நடிகர் அலி கோனி என்பவருடன் காதலில் இருந்ததாகவும் அவர்கள் காதல் ஜூலை மாதம்வரை அவர்கள் ஒன்றாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களது காதல் பிரிய காரணம் யாதெனில் ஆலி கோனி இந்திய பெண்ணுடன் டேட்டிங் செய்ய விரும்பினார். ஆனால் நட்டாஷா ஸ்டேன்கோவிக் ஒரு செர்பிய நாட்டு பெண் என்பதால் அவர்களுடைய அவர்களுக்கு இடையே கலாச்சார வேறுபாடு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.

Natasa 1

இதனால் அடிக்கடி சண்டை வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் 8 சீசனில் கலந்துகொண்ட நட்டாஷா ஸ்டேன்கோவிக் சக போட்டியாளரான உபேன் பட்டேல் என்பவருடன் அதிக நேரத்தை காண்பித்ததால் இவர்களுக்கிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் இருவரும் பேசி பிரிந்தனர். அதன் பின்னரே ஹர்டிக் பண்டியா பொது நிகழ்ச்சியில் நட்டாஷா ஸ்டேன்கோவிக்க்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதல் மலர்ந்தது என்றும் பிறகு தற்போது பாண்டியா அவரை நிச்சயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -