கடற்கரையில் பாண்டியாவுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடாஷா – வைரலாகும் புகைப்படம்

Natasa
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது இந்தியா திரும்பியுள்ள பாண்டியா மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணிக்காக விளையாடவும் தயாராகி இருந்த நிலையில் மீண்டும் முழுத்தகுதியின்மை காரணமாக அணியில் இருந்து விலகினார்.

Natasa 1

- Advertisement -

பாண்டியா புத்தாண்டை முன்னிட்டு தனது காதலியான நட்டாஷா ஸ்டேன்கோவிக் என்பவரை துபாயில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அவர்களின் நிச்சயதார்த்தத்தை மோதிரத்துடன் கூடிய புகைப்படமும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. மேலும் பாண்டியாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது புகைப்படத்தை பகிர்ந்து அவர்களது உறவினை உறுதி செய்தார்.

மேலும் பாண்டியா நடாஷாவின் பெற்றோர்களையும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமீபத்தில் சந்தித்து பேசினார் அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. இந்நிலையில் தற்போது பாண்டியாவின் காதலியான நடாஷா பாண்டியாவுடன் பீச்சில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Natasa

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படம் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருந்தாலும் தற்போது அதனை பதிவிட்டு “த்ரோபேக்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த புகைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

Advertisement