கோலி செய்த இந்த ஒரு விடயத்தால் மைதானத்திலே மகிழ்ச்சியில் நான் கண் கலங்கிவிட்டேன் – நடராஜன் பேட்டி

Nattu-2
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

IND-1

- Advertisement -

ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த வரலாற்று சாதனையை பல்வேறு தரப்பினர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனை அனைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா தொடரை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்பிய நடராஜனை ஊர் மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நட்ராஜன் ஆஸ்திரேலிய தொடர் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Nattu

இதுகுறித்து நடராஜன் கூறுகையில் “ஐபிஎல் தொடரில் விளையாடியதன் மூலம் இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் அங்கு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு எனது உழைப்பு மட்டுமே காரணம். கடுமையாக உழைத்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை என் மூலம் நான் அறிந்து கொண்டேன். நீங்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தீர்கள்.

Nattu

ஒருநாள் போட்டியில் விக்கெட் வீழ்த்தியது எனக்கு ஒரு கனவாக இருந்தது. இந்திய அணியில் இருந்த சக வீரர்கள்,பயிற்சியாளர்கள் என அனைவரும் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார்கள். ஆஸ்திரேலிய மண்ணில் நான் கோப்பையை வாங்கியது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். கோலி என்னிடம் கோப்பையை கொடுத்ததும் நான் கண் கலங்கிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement