நடராஜனுக்கு கிடைக்குமா ? அடுத்த அற்புத வாய்ப்பு. முக்கிய தொடருக்காக தயாராகும் யார்க்கர் கிங் – விவரம் இதோ

Nattu-4
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி அதன்மூலம் இந்திய அணியில் தேர்வானவர் நடராஜன். பேக் அப் பவுலராக தேர்வான அவர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் அவரது இடத்தில் டி20 போட்டிகளில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் சைனியும் காயம் அடைய அவருக்கு பதிலாக தனது முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டை சமீபத்தில் நடராஜன் விளையாடி முடித்தார். அதன்பிறகு அவர் தற்போது நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே விக்கெட்டை வீழ்த்தி சிறப்பான பவுலராக திகழ்ந்து வருகிறார்.

nattu 1

- Advertisement -

மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலியும் அவரது பந்துவீச்சால் ஈர்க்கப்பட்டு இந்திய அணிக்கு “வைட் பாலில்” கிடைத்த சொத்து இந்த நடராஜன் என்று பாராட்டியுள்ளார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமின்றி இந்த இரண்டு டி20 போட்டிகளில் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரு பக்கம் அதிக ரன்களை விட்டுக் கொடுக்க நடராஜன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒருபக்கம் அசத்தி இருந்தார்.

பந்துவீச்சில் ரன்களை கட்டுப்படுத்தும் வல்லமை அவரிடம் உள்ளது என ஏற்கனவே சன் ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி சொல்லியிருந்தார். அதேபோல தற்போது கட்டுக்கோப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்குமா ? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரும் அக்டோபரில் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலக கோப்பை தொடரில் முக்கிய பந்துவீச்சாளராக நடராஜன் நிச்சயம் இருப்பார் என்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் தனது சிறப்பான பவுலிங்கில் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே.

Nattu

டெத் ஓவர்களில் அவர் நிச்சயம் சிறப்பாக பந்துவீசி இந்திய அணிக்கு தனது பங்களிப்பை அளிப்பார். அவர் இந்திய அணிக்கு தேவைதான் என்று லட்சுமணனும் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு அந்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமா ? என்பது தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் தான் களம் இறங்கிய முதல் மூன்று போட்டியிலேயே தனது திறமையை ஆழமாக நிரூபித்த நடராஜன் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

nattu

இவ்வாறு அவர் தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜன் பும்ரா, ஷமி போன்ற வீரர்களுடன் இணைந்து அவரும் டி20 உலக கோப்பை தொடரில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. இதே பார்மில் நடராஜன் தொடர்ந்து விளையாடி நிச்சயம் இந்திய t20 உலகக்கோப்பை அணியில் விளையாட வேண்டும், அவருக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் கிரிக்கெட் ஆர்வலர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்த உங்களது கருத்துக்களை பதிவிடலாம் நண்பர்களே..

Advertisement