மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடராஜனை அணியில் சேர்க்க இதுவே காரணம் – பி.சி.சி.ஐ போட்ட பிளான்

Nattu
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்கு அடி மேல் அடியாக வீரர்களின் விலகல் இருந்துகொண்டு வருகிறது. ஏனெனில் முதல் போட்டிக்கு பின்பு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்பினார். அதேபோன்று அந்த போட்டியில் காயமடைந்த முகமது ஷமி இந்த தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக முகமது சிராஜ் இந்திய அணிக்காக அறிமுகமானார். இந்நிலையில் கடந்த 2வது டெஸ்ட் போட்டியின் போது உமேஷ் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய போது தொடைப்பகுதி தசைப்பிடிப்பு ஏற்பட்டு அந்த இன்னிங்ஸ் முழுவதும் பந்து வீசாமல் வெளியேறினார்.

umesh

- Advertisement -

இதனை தொடர்ந்து ஜனவரி 7ஆம் தேதி துவங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரும் இடம் பெறவில்லை. இந்நிலையில் தற்போது உமேஷ் யாதவ்க்கு பதிலாக இந்திய அணியில் எந்த பந்துவீச்சாளர் இடம் பெறுவார் ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டெஸ்ட் அணியில் ஷர்துல் தாகூர் மற்றும் சைனி ஆகியோர் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் அவர்களுக்கு விட அதிகமான வாய்ப்பு தமிழக வீரர் நடராஜனுக்கு பிசிசிஐ மூலம் வழங்கப்படவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடராஜனை அறிமுக வீரராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறக்கும் ஒரு திட்டத்தையும் பி.சி.சி.ஐ வைத்துள்ளது. ஏனெனில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நடராஜன் சிறப்பாக பந்துவீசி உள்ளார். அதுமட்டுமின்றி சிட்னியில் நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

nattu 1

மேலும் அவர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். மேலும் ஆஸ்திரேலிய அணியில் நேதன் லயன் மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஆகியோர் ஓவர்களை மாற்றி மாற்றி வீசுவது போன்று இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது நடராஜன் மிகச்சிறந்த தேர்வாக அவர்களுடன் இணைந்து பந்துவீச உதவியாக இருப்பார் என்ற காரணத்தினாலும் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளார்.

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் கோலியும், டெஸ்ட் தொடருக்கான வலைப்பயிற்சியின்போது ரஹானேவும் நடராஜன் பந்துவீச்சை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடராஜன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முக்கிய காரணத்தினால் அவர் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாக உள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement