அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் டி20 போட்டியில் நடராஜன் விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் -விவரம் இதோ

Nattu

தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்து ஆஸ்திரேலிய தொடருக்கான சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அங்கு சென்றிருந்த நடராஜன் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

Nattu

மேலும் அந்த தொடரில் சிறப்பாக பந்து வீசிய அவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமின்றி வரும் டி20 உலக கோப்பை தொடரின் இந்திய அணியில் முக்கிய பந்துவீச்சாளராக நடராஜன் இருப்பார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது நடராஜன் இந்த தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தோள்பட்டை மற்றும் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்பது சிரமம் என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது நடராஜன் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகடமியில் தன்னுடைய உடற்தகுதி உறுதி செய்யும் பயிற்சியையும், காயம் குணமடைவதற்கான மருத்துவ ஆலோசனையும் பெற்று வருகிறார்.

இதேபோன்று வருண் சக்கரவர்த்தியும் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தாலும் அவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனையை மேற்கொள்ள இருக்கிறார். ஏற்கனவே ஒரு முறை உடற்தகுதி சோதனையில் வரும் சக்கரவர்த்தி தோல்வி அடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக ராகுல் சாகர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Varun

வரும் வெள்ளிக்கிழமை முதல் டி20 போட்டி நடைபெற இருக்கும் நிலையில் அதற்குள் இவர்கள் இருவரும் காயத்திலிருந்து மீண்டும் அணியில் இடம் பிடிப்பார்களா ? என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.