சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப்படி ஒரு விஷயம் யாருக்கும் நடந்ததில்லை – விவரம் இதோ

Nattu
- Advertisement -

ஐபிஎல் தொடரில் சன் ரைஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தவர் தங்கராசு நடராஜன். அந்த அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார் தங்கராசு நடராஜன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும் அவரது அபார பந்துவீச்சு திறமையாலும் தொடர்ந்து அவருக்கு டி20 மற்றும் ஒருநாள் அணி என இரண்டு வகையான அணியிலும் இடம் கொடுக்கப்பட்டது.

Nattu-2

- Advertisement -

ஒருநாள் தொடர் முடிவடைந்தவுடன் நடராஜன் வாஷிங்டன், சுந்தர், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படாமல் வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீரர்களாக இந்திய அணி வைத்துக்கொண்டது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் அடைந்து விட்டார். இதன் காரணமாக ஒரு பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு தேவைப்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர்களாக தங்கராசு நடராஜன், ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவர் மட்டுமே இருக்கின்றனர். சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி காயம் காரணமாக முதல் போட்டியிலேயே வெளியேறிவிட்டார். இந்நிலையில் மீதமிருக்கும் இரண்டு பேரை வைத்து பார்த்தால் இடது கை வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜனுக்கு தான் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

nattu 1

பயிற்சியில் பந்து வீச சென்ற தங்கராசு நடராஜன் முதலில் டி20 தொடரில் இடம்பெற்று இருந்த வருண் சக்ரவர்த்தி காயம் அடைய டி20 அணியில் இடம் பிடித்து விளையாடி அசத்தினார். அதேபோன்று நவ்தீப் சைனி ஒருநாள் தொடரில் காயமடைய ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடி அசத்தினார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அடுத்தடுத்து ஒருநாள் அணி, டி20 அணியில் இடம்பிடித்த அவர் தற்போது உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஒருவேளை அவர் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடினால் அவர் ஒரு விசித்திரமான சாதனையை அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் மாற்று வீரராக அணிக்குள் வந்து முக்கிய வீரராக மாறியுள்ளார்.

Nattu

தொடர்ந்து வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக வந்து அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வாய்ப்புகளை பெற்ற வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணி என வரிசையாக அவர் வாய்ப்பை பெற்றுள்ளது கிரிக்கெட் உலகை வியக்க வைத்துள்ளது. இப்படி எந்த ஒரு வீரரும் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்துஅனைத்து வடிவிலான போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியதில்லை என்று ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement