டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதன் மூலம் யாரும் படைக்காத அறிய சாதனையை படைத்த நடராஜன் – விவரம் இதோ

Nattu-1
- Advertisement -

தங்கராசு நடராஜன் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஐபிஎல் தொடரில் சன் ரைஸ் ஹைதராபாத் அணிக்காக அபாரமாக பந்து வீசியதன் மூலம் இந்திய அணியில் தேர்வானார். முதலில் வலைப்பயிற்சியில் பந்துவீசும் ஒரு பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டவர் அதனைத் தொடர்ந்து டி20 அணியில் தெரிவு செய்யப்பட்டு இருந்த மற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருன் சக்கரவர்த்தி காயமடைந்தார். இதன் காரணமாக உடனடியாக அவரது இடத்திற்கு நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

Nattu

- Advertisement -

அதனைத் தொடர்ந்து டி20 போட்டியில் ஆடி முடித்த பின்னர் ஒரு நாள் போட்டியிலும் உடனடியாக அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது. இரண்டு தொடர்களிலும் மிகச் சிறப்பாக பந்து வீசினாலும் நடராஜன் இவரது சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரிலும் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசும் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, நவதீப் சைனி, உமேஷ் யாதவ் போன்ற பல பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் தொடர்ந்து காயமடைந்தனர். இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பிரிஸ்பன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Nattu

முதல் போட்டியிலேயே லாபஸ்சேன், மேத்யூ வடே உட்பட 3 விக்கெட்டுகளை சாயத்தார். இதன் மூலம் 80 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு சுற்றுப்பயணத்தில் மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமான ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் தங்கராசு நடராஜன்.

தனது திறமையை நம்பி அதன்மூலம் பெரிதாக எந்த ஒரு உதவியும் இல்லாமல் இந்த அளவிற்கு சாதித்துள்ளார். நடராஜனை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் வாய்நிறைய பாராட்டி வருகின்றனர்.

Advertisement