நீங்க இப்படியே பண்ணா நான் உள்ள போயிடுவேன். ரசிகர்களுடன் செல்ல சண்டையிட்ட நட்டு – வைரலாகும் வீடியோ

Nattu
- Advertisement -

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மிகப்பெரிய தொடரில் விளையாடி தற்போது நாடு திரும்பி உள்ளது. இந்த தொடரின் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும், டி20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய வீரர்களுக்கு அவரவர்கள் சொந்த ஊர்களில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்த வீரருமான நடராஜனுக்கு சேலத்தில் பலத்த வரவேற்பு அவரது ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. அந்த வீடியோ அப்போதே இணையத்தில் வைரல் ஆனது.

மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜன் நேரடியாக அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்று நெட் பவுலராக இருந்து மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து தற்போது நாடு திரும்பியுள்ள அவர் இனிவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று அனைவரும் கூறி வருகின்றனர்

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து தாயகம் திரும்பிய நடராஜன் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காரின் மூலம் வந்தடைந்தார் அவர் வருகையை ஒட்டி அவரின் சொந்த கிராமத்தில் அவரை வரவேற்க பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பேண்டு வாத்தியங்கள், சாரட் என பல்வேறு ஏற்பாடுகளுடன் வரவேற்பினைப் பெற்ற நடராஜன் ரசிகர்கள் மத்தியிலும் பலத்த பாராட்டுகளை பெற்று விட்டார்.

ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து நாடு திரும்பிய நடராஜனை சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள ஊராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதே போன்று தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நடராஜனை பார்க்க அவரது ரசிகர்கள் தினமும் வீட்டின் முன் படையெடுத்து வருகின்றனர். ரசிகர்களின் அன்பிற்கு பதிலளிக்கும் விதத்தில் நடராஜன் அவரது வீட்டில் நின்றவாறு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் நடராஜனின் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும்போது நடராஜன் ரசிகர்களிடம் சின்ன வேண்டுகோளை வைக்கிறார். அதில் ஒவ்வொருவராக வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் உங்களுக்காகத்தான் நான் இங்கு நிற்கிறேன். கால் வலித்தாலும் உங்களுக்காகவே நான் இங்கு நிற்கிறேன். இப்படி நீங்கள் சண்டை போட்டால் உள்ளே திரும்பி சென்று விடுவேன் என அவர் ரசிகர்களை நோக்கி கூறுகிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement