பும்ரா பார்ம் அவுட்ல இருக்காரு. போனை போட்டு அவரை இங்கிலாந்துக்கு கூப்பிடுங்க – நாசர் உசேன் ஓபன்டாக்

Nasser-1
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாகவே பந்துவீச்சில் அசத்திய வந்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் இறுதிப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தவறியது. மேலும் இந்த இறுதிப் போட்டிக்கான வேகப்பந்து வீச்சாளர்களின் தேர்வும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது.

shami 2

- Advertisement -

ஏனெனில் அணியில் இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷமி மற்றும் இசாந்த் சர்மா ஓரளவுக்கு சுமாராக பந்து வீசினாலும் பும்ரா படு சொதப்பலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக தற்போது இந்திய அணியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

அதிலும் இங்கிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் தரமான வேகப்பந்து வீச்சை கூட்டணி அமைத்தால் மட்டுமே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற முடியும் என்றும் கூறி வருகின்றனர். இதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நிச்சயம் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

bumrah 2

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நாசர் உசேன் இந்திய அணியில் செய்ய வேண்டிய புதிய மாற்றம் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : தற்போது பும்ரா பார்ம் அவுட்டில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. எனவே அவருக்கு பதிலாக புவனேஸ்வர் குமாரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து போன்ற ஸ்விங்கிற்கு சாதகமான மைதானங்களில் நிச்சயம் புவனேஷ்வர் குமார் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் சிறப்பாக பந்து வீசுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Bhuvi

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement