Worldcup : இங்கிலாந்து இந்த விடயத்தில் டாப். இந்திய அணி ஒன்றுமே இல்லை – நாசர் ஹுசேன் கணிப்பு

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

hussain
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Pandya

- Advertisement -

இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றடைந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இப்போதே தொடரை எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி குறித்தும், இந்திய அணி குறித்தும் இங்கிலாந்து அணியை சேர்ந்த முன்னாள் வீரரான நாசர் உசேன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இங்கிலாந்து அணி இந்திய அணியை காட்டிலும் இந்த தொடரில் பலமான அணி என்றே நான் கூறுவேன். ஏனெனில் கடைசியாக நடந்த 4 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் தொடர்ந்து அடித்தனர்.

இதை போன்ற பேட்டிங் பலம் இந்திய அணியிடம் இல்லை ஏனெனில் இங்கிலாந்து அணியில் முதல் 5 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மொயின் அலி மற்றும் ஸ்டோக்ஸ் போன்றவர்கள் சிறப்பாக ஆடி அணிக்கு ரன்களை சேர்ப்பார்கள். ஆனால் இந்திய அணியிடம் பின்வரிசை ஆட்டக்காரர்கள் பலம் இல்லை என்றே நான் கருதுகிறேன். மேலும் எங்கள் அணியின் ஆல்ரவுண்டர்கள் தரமாக உள்ளனர். எங்கள் அணியின் பந்துவீச்சை காட்டிலும் இந்திய அணியின் பந்துவீச்சு சுமார் என்று நான் கூறுவேன் என்று நாசர் உசேன் தெரிவித்தார்.

Advertisement