கோலி தலைமையிலான அணி 7 ஆண்டுகளாக ஒரு ஐ.சி.சி கோப்பையையும் ஜெயிக்காததற்கு காரணம் இதுதான் – நாசர் உசேன் பேட்டி

Nasser-1
- Advertisement -

இந்திய அணி கடைசியாக 2013-ம் ஆண்டு தோனியின் தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இதுதான் இந்திய அணி கடந்த 7 வருடங்களில் வென்ற ஒரே ஒரு ஐசிசி தொடர் ஆகும். அதனை தொடர்ந்து விராட் கோலியின் கையில் கேப்டன்ஷிப் சென்றது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் தோல்வியே பரிசாக கிடைத்தது.

Champions trophy

- Advertisement -

அடுத்து 2016ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் செமி பைனல் போட்டி வரையும், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் செமி பைனல் போட்டிக்கு மட்டுமே சென்றது.

ஆனால் எப்படியும் இந்த 4 தொடர்களில் இரண்டு கோப்பையாவது வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வியை மட்டுமே தழுவியது. இந்நிலையில் இதற்கு காரணம் என்ன என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்..

hussain

ஐசிசி தொடர்களுக்கு மட்டும் இந்திய அணி வித்தியாசமாக அணியை தேர்வு செய்து அனுப்பியது. எப்போதும் அணியின் தேர்வு சரியாக இருந்தது இல்லை. எந்த நாட்டில் போட்டி நடக்கிறதோ அந்த நாட்டுக்கு ஏற்றவாறு வீரர்களை மாற்றிக்கொள்ளவேண்டும். வீரர்களையும் அப்படித்தான் அனுப்பவேண்டும்.

- Advertisement -

ஐசிசி தொடர் என்பது ஒரு போட்டிகளுக்கான திட்டம் இல்லை அது ஒரு மிகப் பெரிய தொடர். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் யுவராஜ் சிங் கடுமையாக சொதப்பினார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் சொதப்பினர்.

Ind

இப்படித்தான் இந்திய அணி தொடர்ந்து தோற்று வருகிறது. பந்து லேசாக ஸ்விங் ஆனால் பேட்ஸ்மேன்கள் தடுமாறுகின்றனர். இது தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார் நாசர் ஹூசைன்.

Advertisement