கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இங்கிலாந்து வீரர்களை எச்சரித்த நாசர் ஹுசேன் – விவரம் இதோ

Vaughan

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது.

indvseng

இதன்பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இனிவரும் போட்டிகளில் ஈடு கொடுக்க முடியாது என்றும் அனைவரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி வலுவாக திரும்பும் என்றும் எனவே நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டனான நாசர் ஹுசேன்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் ஸ்விங்கில் மிரட்டி இருக்கலாம். ஆனால் சீம் பவுலர்களை கொண்ட இந்திய அணியால் அதனை செய்ய முடியவில்லை. இருப்பினும் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் நடைபெற இருக்கும் மைதானமானது இந்திய அணியின் பவுலர்களுக்கு கைகொடுக்கும் ஒரு மைதானம்.

robinson

எனவே அதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இந்திய அணி அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் அதன்பிறகு சிறப்பாக விளையாடி அந்த தொடரை வென்றது அதனால் அவர்களை எளிதாக எடை போடக்கூடாது. அவர்களின் கம்பேக் வேறுவிதமாக இருக்கும் இதனால் நிச்சயம் இங்கிலாந்து தனி கவனத்துடன் இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த தொடரில் இதுவரை அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். கோலி நல்ல பார்மில் இல்லாத போதும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் இன்னும் கோலி பார்முக்கு வந்தால் அவர்களது ஆட்டம் வேறு லெவலில் இருக்கும் என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Advertisement