
இங்கிலாந்தில் உள்ள சௌத்தாம்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நசீர் உசைன், இந்திய அணியின் தேர்வுக் குழுவானது அடுத்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டு, இந்திய அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர் ஒருவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார். அவருடைய இந்த கருத்தை மற்றொரு வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் ஆமோதித்திருக்கிறார்.
இந்த இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி அசத்தியுள்ளனர். இருந்தாலும், அவர்களால் ஆரம்பகட்ட ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் பந்தை அதிகமாக ஸ்விங் செய்தால்தான் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள், பந்தை பெரிதாக ஸ்விங் செய்யாததால் தான் அவர்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து வர்ணனையாளராக இருந்த நசீர் உசைன் கூறியதவது, இந்திய அணியின் தேர்வுக் குழுவானது எதிரவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டு, மிகச் சிறந்த ஸ்விங் பௌலரான புவனேஷ் குமாரை மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் முடிவைப் பற்றி யோசிக்க வேண்டும். இங்கிலாந்தின் சூழ்நிலை, அவருடைய ஸ்விங் பௌலிங்கிற்கு மிகப் பெரிய அளவில் ஒத்துழைக்கும். இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடினாலும்கூட, அது இந்திய அணிக்கு தான் மிகப் பெரிய பலமாக இருக்கும் என்று கூறினார். அவர் கூறிய இந்த கருத்திற்கு சுனில் கவாஸ்கரும், தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பின் காரணமாக அவதிப்பட்ட புவனேஷ் குமார், அந்த ஐபிஎல்லின் எஞ்சிய போட்டிகளில் விளையாட வில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் வெளியேறினார். அதற்குப் பிறகு காயத்திலிருந்து அவர் மீண்டு வந்திருந்தாலும், இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க இந்திய தேர்வுக் குழு முன் வரவில்லை. அடுத்த மாதம் இலங்கை செல்லவிருக்கும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #
இங்கிலாந்தில் உள்ள சௌத்தாம்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நசீர் உசைன், இந்திய அணியின் தேர்வுக் குழுவானது அடுத்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டு, இந்திய அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர் ஒருவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார்.
அவருடைய இந்த கருத்தை மற்றொரு வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் ஆமோதித்திருக்கிறார். இந்த இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி அசத்தியுள்ளனர். இருந்தாலும், அவர்களால் ஆரம்பகட்ட ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் பந்தை அதிகமாக ஸ்விங் செய்தால்தான் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.
ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள், பந்தை பெரிதாக ஸ்விங் செய்யாததால் தான் அவர்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து வர்ணனையாளராக இருந்த நசீர் உசைன் கூறியதவது, இந்திய அணியின் தேர்வுக் குழுவானது எதிரவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டு, மிகச் சிறந்த ஸ்விங் பௌலரான புவனேஷ் குமாரை மீண்டும் அணிக்குள் கொண்டுவரும் முடிவைப் பற்றி யோசிக்க வேண்டும்.
இங்கிலாந்தின் சூழ்நிலை, அவருடைய ஸ்விங் பௌலிங்கிற்கு மிகப் பெரிய அளவில் ஒத்துழைக்கும். இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடினாலும்கூட, அது இந்திய அணிக்கு தான் மிகப் பெரிய பலமாக இருக்கும் என்று கூறினார். அவர் கூறிய இந்த கருத்திற்கு சுனில் கவாஸ்கரும், தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பின் காரணமாக அவதிப்பட்ட புவனேஷ் குமார்,
அந்த ஐபிஎல்லின் எஞ்சிய போட்டிகளில் விளையாடவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் வெளியேறினார். அதற்குப் பிறகு காயத்திலிருந்து அவர் மீண்டு வந்திருந்தாலும், இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க இந்திய தேர்வுக் குழு முன் வரவில்லை. அடுத்த மாதம் இலங்கை செல்லவிருக்கும் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.