எத்தனை மீட்டிங் போட்டாலும் இவரை ஈஸியா அவுட் ஆக்க முடியாது – நாசர் ஹுசேன் ஓபன் டாக்

Nasser-1
- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 வருடங்கள் விளையாடினார். இவர் விளையாடிய காலகட்டத்தில் இருந்த பந்துவீச்சாளர்கள் எல்லாம் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஜாம்பவான்களாக இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஏழு அடி உயர பந்துவீச்சாளர்கள், இங்கிலாந்து அணியில் அதிகமாக ஸ்விங் செய்யும் பந்துவீச்சாளர்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் என பலரும் இருந்தனர். ஆஸ்திரேலியாவில் பிரட் லீ போன்ற பந்து வீச்சாளர்களை பற்றி சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட பந்துவீச்சாளர்களை தன்னுடைய அசாத்தியமான பேட்டிங்கால் தவிடுபொடியாக்கியுள்ளார் சச்சின். இவரை விக்கெட் எடுப்பதற்கு ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் வித்தியாசமான உத்திகளைக் கையாள்வார்கள்.

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் அவர் விளையாடிய காலத்தில் சச்சினுக்கு எதிராக அவரை வீழ்த்த அமைக்கப்பட்ட களவியூகம் குறித்த தனது நினைவுகள் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்…

hussain

கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால் அது சச்சின் டெண்டுல்கர் தான். அவரது டெக்னிக் ஆன ஆட்டம் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். நான் இங்கிலாந்து அணி கேப்டனாக இருக்கும் போது அவரைப் பார்த்து மிகவும் சிரமப்பட்டேன். அவருக்கு எதிராக பந்துவீச்சாளர்கள் கடினப்பட்டுள்ளதையும் நான் கண்டுள்ளேன்.

- Advertisement -

அவரை எப்படி விக்கெட் வீழ்த்துவது என்பது பற்றி பந்துவீச்சாளர்களுடன் நிறைய விவாதங்கள் நடத்தியுள்ளோம். தற்போது வரை அவரை விக்கெட் வீழ்த்த எத்தனை கூட்டம் நடத்தினோம் என்று எனக்கு ஞாபகம் இல்லை. டெக்னிக் ஆன பேட்ஸ்மேன்கள் தான் உலகம் முழுவதும் ரன் குவிக்கிறார்கள்.

சச்சின் தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அதே நேரத்தில் தற்போது கேன் வில்லியம்சன் மிகச் சிறப்பாக ஆடி கொண்டு வருகிறார். இவரால்தான் மூன்று விதமான போட்டிகளிலும் விராட் கோலிக்கு அடுத்து ரன் குவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் நாசர் ஹுசைன்.

Advertisement