ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து வெல்லவே வாய்ப்பிருக்கு.. பின்ச் சொன்னது பற்றி நாசர் ஹுசைன்

Nasser Hussain 2
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் செமி ஃபைனல் வெற்றிகளைப் பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இந்தியா பாதுகாப்பு காரணங்களால் துபாயில் விளையாடுகிறது. அங்கு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா நல்ல ஃபார்மில் இருக்கிறது.

குறிப்பாக லீக் போட்டியில் இதே நியூசிலாந்து அணியை இதே துபாய் மைதானத்தில் இந்தியா தோற்கடித்தது. எனவே இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்று இங்குள்ள ரசிகர்கள் நம்புகிறார்கள். அதே சமயம் 2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிகளில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து கோப்பையை வென்றது.

- Advertisement -

நியூஸிலாந்து வெல்லும்:

எனவே நியூசிலாந்துக்கு எதிராக ஒரு ஐசிசி ஃபைனல் போட்டியில் கூட இந்தியா வென்றதில்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் கலக்கத்தையும் கொடுக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு நிகராக நியூசிலாந்து அணி திறமையும் போராட்ட குணத்தையும் கொண்டிருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். எனவே இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கே வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

அதே சமயம் ஒருவேளை நியூசிலாந்தை தோற்கடிக்க முடியுமேயானால் அது இந்தியாவால் தான் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நாசர் ஹுசைன் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்து அணி சோக் செய்ய மாட்டார்கள். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சுடன் நேற்று நாங்கள் இரவு உணவு சாப்பிட்டோம்”

- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா:

“அப்போது நியூசிலாந்து தங்களைத் தாங்களே வீழ்த்தி கொள்ளக்கூடிய அணி இல்லை என்று அவர் எங்களிடம் சொன்னார். அதாவது முக்கியமான போட்டிகளில் பாறையைப் போல் நின்று நியூசிலாந்தினர் அசத்துவார்கள் என்று அவர் எங்களிடம் தெரிவித்தார். நியூசிலாந்து அணியை பார்க்கும் போது அவர்களிடம் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது சிறந்த செயல்பாடுகளைக் கொடுக்கக்கூடிய கடினமான கிரிக்கெட்டர்கள் உள்ளனர்”

இதையும் படிங்க: இந்தியா திறமையை வெச்சு ஜெய்க்குது.. அந்த 7 பேர் போதும்.. துபாய் மண்ணை வெச்சு ஜெய்க்கல.. புஜாரா பதிலடி

“அதனாலேயே அவர்கள் பெரும்பாலும் செமி ஃபைனல், ஃபைனல் போட்டிகளில் இருக்கிறார்கள். அவர்களிடம் கேன் வில்லியம்சன் போன்ற ஆல் டைம் மகத்தான பிளேயர்களும் ரச்சின் ரவீந்திரா போன்ற இளம் வீரர்களும் உள்ளனர். அந்த வகையில் நியூசிலாந்து அணியில் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் கலவையாக உள்ளனர். அதனால் அவர்கள் தோல்வியை சந்திக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தோல்வியை சந்தித்தால் அது அவர்களை இந்தியா தோற்கடிப்பதால் தான் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement