கங்குலியின் இந்த செயல் எனக்கு சுத்தமா பிடிக்காது. ரொம்ப வெறுப்பா இருக்கும் – இங்கி கேப்டன் அதிரடி பேட்டி

Nasser
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகளவில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த ஓய்வு நேரத்தை சமூகவலைதளத்தின் மூலமாக முன்னாள் வீரர்கள் பலரும் ரசிகர்களுடன் அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது மற்றும் சக வீரர்களுடன் உரையாடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.

nasar

- Advertisement -

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நாசர் ஹுசேன் இந்திய அணியின் கேப்டன் குறித்தும் இந்திய அணி குறித்தும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்திய அணியில் எனக்கு பிடிக்காத கேப்டன் என்றால் அது கங்குலி தான்.

ஏனெனில் கங்குலியின் தலைமையிலேயே இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. மேலும் அவரது தலைமையில் இந்திய அணி யாரும் அசைத்துப் பார்க்க முடியாத வெற்றிகரமான அணியாக எதிரணிகளை பயமுறுத்தும் அணியாகவும் மாறியது. ஆனால் இந்த விடயம் காரணமாக எனக்கு கங்குலியின் மீது வெறுப்பு ஏற்படவில்லை.

Ganguly

எப்போது இந்திய அணியை எதிரணியின் கேப்டன் களத்தில் எதிர்த்தாலும் அதை அவர் வேறு விதமாக கங்குலி கையாள்வார் அதாவது இரு அணிகளுக்கும் இடையே போட்டிக்கு முன்னர் டாஸ் போடும் பொழுது அவர் தாமதமாக வந்து எதிர் அணி கேப்டன்களை வெறுப்பேற்றுவார். இதனை அவர் வாடிக்கையாகவே வைத்திருந்தார்.

- Advertisement -

அதன்படி ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் தனது சுயசரிதை புத்தகத்தில் அப்படி ஒரு நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று தான் கேப்டனாக இருக்கும் போதும் வேண்டுமென்றே டாஸ் போட தாமதமாக கங்குலி வருவதை குறிப்பிட்டுள்ள நாசர் ஹுசேன் இதன் காரணமாக அவரை எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது 10 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இருவரும் ஒன்றாக வர்ணனையாளராக வேலை செய்துவருகிறோம். இப்போதுகூட வர்ணனை செய்யும் போது கங்குலி சிறிது தாமதமாகத்தான் வருவார் என்றும் அவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement