இந்திய அணியில் எழுதப்படாத விதி இருக்கு..! கிரிக்கெட் விதிவிலக்கல்ல..! – உண்மையை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீரர்..!

ms
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. மேலும், இந்த போட்டியில் மெதுவாக விளையாடிய தோனி மீதான விமர்சனம் குறித்து கோலி பதிலளித்திருந்தார். தற்போது இதனை குறிப்பிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாஸீர் ஹூசைன் கருத்து தெரிவித்துள்ளார்.
hussain
கடந்த சனிக்கிழமை(ஜூலை 14) இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அணி 7 விக்கெட் இழப்பிற்க்ளு 322 ரன்களை எடுத்து.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 45 ரன்களும், ரெய்னா 46 எடுத்திருந்தனர்.

மேலும் , இந்த போட்டியில் இந்திய அணியின் சிறந்த பினிஷர் என்று கூறப்படும் தோனி மிகவும் பொறுமையான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வந்தார். தோனி ரன் குவிக்க அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதால் மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் தோனி ஆடும் போதெல்லாம் அவரன் ஆட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் கூச்சலிட்டு வந்தனர். இறுதியில் 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனி ஆட்டமிழந்தார்.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தோனியின் இந்த மந்தமான ஆட்டம் குறித்து இந்திய கேப்டன் கோலியிடம் கேட்டபோது “அவர் (தோனி )நினைத்தது போல ஆடமுடியாமல் போனால் மட்டுமே இது போன்ற கேள்விகள் வருகின்றது. அவரை குற்றம் சொல்ல சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர் சிறப்பாக விளையாடினால் அவர் ஒரு சிறந்த பினிஷெர். இல்லையென்றால் அவர் மீது விமர்சனத்தை வைப்பார்கள்.” என்று தெரிவித்திருந்தார்.
india-cricket-team
இந்நிலையில் சமீபத்தில் கோலி கூறிய கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நாஸீர் ஹூசைன் ” தோனி மீதான விமர்சனங்களுக்கு கோலி பதிலடி கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. இந்தியாவை பொறுத்த வரை விளையாட்டில் மட்டுமல்ல, பொதுவாக எல்லா துறைகளிலுமே சீனியர்களுக்கு ஜூனியர்கள் மதிப்பளிப்பது வழக்கம். அதில் கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கல்ல. இந்திய அணியில் எப்போதும் ஜூனியர் வீர்ரர்கள் சீனியர் வீரர்களை விமர்சிக்காமல், விட்டுக்கொடுக்காமல் அவர்களுக்கு மதிப்பளிப்பது வழக்கம்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement