இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரார்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய வேளையில் அவர்களுடைய எனர்ஜியை அப்படியே முகமது சிராஜ் கொண்டு வருவதாகவும் பேசியுள்ளார்.
முகமது சிராஜை பாராட்டிய நாசர் ஹுசேன் :
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு ஸ்பெல்லிலும் சிராஜ் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எப்பொழுது பந்துவீச வந்தாலும் முழு மனதுடன், தன்னிடம் இருக்கும் திறமை அனைத்தையும் அணிக்காக வெளிப்படுத்துகிறார்.
இப்படி அவர் அர்ப்பணிப்புடன் பந்து வீசுவதை பார்ப்பதற்கே பூரிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு கேப்டனுக்குமே இவரைப் போன்ற ஒரு வீரர் தேவை. அந்த வகையில் முகமது சிராஜ் இந்திய அணியை தூக்கி நிறுத்துகிறார். நான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும்போது டேரன் கவுச்சை மிகவும் விரும்புவேன்.
அவரைப் போன்று இந்திய அணிக்கு ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கும் வீரராகவும், எனர்ஜியை கொண்டு வரும் வீரராகவும் நான் முகமது சிராஜை பார்க்கிறேன். இந்த இங்கிலாந்து தொடரில் அவர் தனது பங்களிப்பின் மூலம் இந்திய அணிக்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளார்.
சில வீரர்களின் திறன் வெளியில் தெரியாமல் இருந்தாலும் மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் முகமது சிராஜ் இந்திய அணிக்காக பெரிய பங்கினை வழங்கி வருகிறார். இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்திலும் சிராஜ் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று தான் நினைப்பதாக நாசர் உசேன் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இங்கிலாந்துல எப்படி ஆடப்போறாங்கனா கேட்டிங்க? இந்திய பேட்ஸ்மேன்கள் நிகழ்த்திய – வரலாற்று சாதனை
இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த ஐந்தாவது போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சிலும் இதுவரை 1 விக்கெட் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



