ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்த் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதத்தை அடித்து முக்கிய பங்காற்றினார். அதே போல கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்பி 77 ரன்களும் ஜெயஸ்வால் 161 ரன்களும் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.
அவர்களை விட கேப்டனாக இந்தியாவை தலைமை தாங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா மொத்தம் 8 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 150க்கு ஆல் அவுட்டாகி இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது அபாரமாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை 104க்கு சுருட்டி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
பும்ரா அசத்தல்:
மேலும் இதுவரை பும்ரா 41 டெஸ்ட் போட்டிகளில் 181 விக்கெட்டுகளை 20.06 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 150+ விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஜாம்பவான் சிட்னி பேர்ன்ஸ்க்கு (16.40) அடுத்து சிறந்த சராசரியை கொண்ட பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இந்நிலையில் சிட்னி பேர்ன்ஸ்க்கு நிகராக அசத்தும் பும்ரா உலகின் சிறந்த ஆல் ஃபார்மட் பவுலர் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய அணியினர் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பற்றி அதிகமாக பேசி திட்டங்களை வகுத்து கடைசியில் பும்ராவிடம் சிக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரிடம் மெதுவான பந்துகள், யார்க்கர், பவுன்சர் ஆகியவை உள்ளன. போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியர்களின் அனைத்து கவனமும் விராட் கோலி, ரோஹித் சர்மா மீதிருந்தது”
ஹுசைன் பாராட்டு:
“அதே போல பாதி இந்திய அணியினர் ஸ்டீவ் ஸ்மித் பற்றி நினைத்தார்கள். அவர்கள் அதிக ரன்கள் குவிப்பார்களா என்று என்று பேசினார்கள். ஆனால் அவர்கள் பும்ராவை பற்றி அதிகம் பேசவில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை பவுலர் என்பதால் அவரைப்பற்றி ஆஸ்திரேலியா அதிகம் பேசாமல் இருந்திருக்கலாம். சிட்னி பேர்ன்ஸ் இருக்கும் பட்டியலில் பும்ராவும் இருக்கிறார்”
இதையும் படிங்க: ரோஹித் சர்மா வந்தாலும் பிரச்சனை இல்ல.. கே.எல் ராகுலுக்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ
“நீண்ட காலமாக அவர் 20க்கும் நெருக்கமான சராசரியை கொண்ட பட்டியலில் இருக்கிறார் அது அற்புதமானது. அவர் உலகின் சிறந்த ஆல் ஃபார்மட் பவுலராக இருக்கிறார். அவரை போல் யாரும் இல்லை” என்று கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட தயாராகி வருகிறது.



