தோனி மட்டுமல்ல இவரும் கேப்டன் கூல் தான். இந்திய வீரரை பாராட்டிய – நாசர் ஹுசேன் புகழாரம்

Nasser-1
- Advertisement -

நடப்பு ஆண்டின் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிற்கு பிறகு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முடிவில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இந்த தொடருக்கான வரவேற்பு கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

mi

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான நாசர் உசேன் இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் செயல்பாடு குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா கேப்டன் பதவியில் அமைதியாக செயல்படுகிறார். அவரும் ஒரு கேப்டன் கூல் தான். மேலும் அவர் ஒரு ஜென்டில்மேன் ஆவார். ஐபிஎல் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் ஆகிய அனைவரையும் சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.

Rohith

சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கிறார். என்னை பொறுத்தவரை டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகி ரோகித் இடம் விட்டு கொடுக்க சரியான தருணம் இதுவாக நினைக்கிறேன்.

rohith 1

ரோகித் சர்மா ஒரு திறமைவாய்ந்த பேட்ஸ்மேன். டி20 போட்டியிலும் அவரால் விரைவாக ரன்களை குவிக்க முடியும். இறுதிப்போட்டியில் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றாலும் சிறப்பாக விளையாடினார் என்று அவரது கருத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement