கோலியின் மீது மரியாதை இருக்கு. ஆனா பயம் இல்லை. அவருக்கு எதிராக மோத ரெடி – சவால் விட்ட 17 வயது பாக் பவுலர்

- Advertisement -

இந்திய அணியின் கேப்டனும், கிரிக்கெட் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனுமாக இருப்பவர் விராட் கோலி. தற்போதுள்ள வீரர்களில் இவரின் சாதனையை அடித்துக்கொள்ள வேறுயாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு நாள்தோறும் சாதனைகளை படைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு தற்போது வரை சர்வதேச அரங்கில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரன்களை குவித்து விட்டார்.

kohli

மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் பாகிஸ்தான் பிரபலமான பந்துவீச்சாளர்கள் என அனைவரையும் தனது பாணியில் துவம்சம் செய்து இருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தானின் 17 வயது சில்வண்டு வீரர் விராட் கோலியை சீண்டி பேசியுள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவாகி வருபவர் இளம் வீரர் நஸீம் ஷா. இவருக்கு 17 வயதுதான் ஆகிறது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். அதன் பின்னர் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Naseem-Sha

மேலும் பிப்ரவரி மாதம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். இந்நிலையில் 17 வயதே ஆன இவர் விராட் கோலியையும் சீண்டி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது…

- Advertisement -

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் ஸ்பெஷலான ஒன்றுதான். ஆனால் இந்த நேரத்தில் அந்த போட்டிகள் நடைபெறுவது இல்லை. இந்திய அணிக்கு எதிராக விளையாட காத்துக்கொண்டிருக்கிறேன். அந்த அணியின் கேப்டன் விராட் கோலியை பொருத்தவரை அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது .ஆனால் அவரை பார்த்து எனக்கு பயமெல்லாம் கிடையாது.

Naseem

சிறப்பான வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது எப்போதும் சவாலானது. அது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் விராட் கோலிக்கு பந்து வீசும்போது நீங்கள் உங்களிடம் இருக்கும் இயல்பான திறமையை விட சற்று அசத்தலான ஒரு செயல்பாட்டை காண்பிக்க வேண்டும். இல்லை என்றால் அவ்வளவு தான். இந்தியா மற்றும் விராட் கோலிக்கு எதிராக விளையாடும் தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் நஸீம் ஷா.

Advertisement