தனது அம்மா இறந்ததை அறிந்தும் போட்டியில் விளையாடி நெகிழவைத்த பாக் வீரர் – அதிர்ச்சி தகவல்

Naseem
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னர் தற்போது ஆஸ்திரேலியா ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Pak-1

- Advertisement -

இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்த போட்டியில் 16 வயதே ஆன நசீம் ஷா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்துள்ளார் என்பதால் பயிற்சி போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் திடீரென்று அவரின் தாயார் இறந்த செய்தி பாகிஸ்தானில் இருந்து வந்தது.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தாலும் துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறார் மேலும் அவரது தாயார் மறைவை ஒட்டி போட்டியைத் தவிர்க்க கூடாது என்பதற்காக கருப்பு பட்டை அணிந்து போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். 5 முதல் தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 16 வயதான நசீம் ஷா பாகிஸ்தான் அணியில் அவரது அசாத்திய திறமை காரணமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Naseem

மேலும் நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் அவர் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாவார் என்று தெரிகிறது. அவரின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது மேலும் அவருடைய அம்மாவின் இறப்பிற்காக ரசிகர்கள் இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement