நாசர் ஹுசைன் கருத்துக்கு இந்திய அணியின் பதிலடி.! அடுத்தடுத்து தொடரும்.!

hussain

இந்திய அணியை பொறுத்த மட்டில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடர் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறது. ஏனென்றால் முதல் இரு டெஸ்ட் போட்டிகளையும் இந்திய அணி இழந்து தவித்தது. பல பக்கமும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்திய அணியின் பல வீரர்கள் இந்த தொடருக்கு முன்பாக காயம் அடைந்தார்கள். இதனிடையே கேப்டன் விராட் கோலியும் காயமடைந்தார்.

third3

கோலியை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சோபிக்க தவறினர். 3வது டெஸ்ட் போட்டி துவங்கும் முன் இந்திய அணியை பற்றி கடுமையாக விமர்சித்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன். அதாவது, இந்திய அணியை உலகின் சிறந்த அணி என்று கருதினேன். இப்போது இங்கிலாந்து தான் சிறந்த அணியாக எனக்கு தெரிகிறது. இந்திய அணி இத்தொடரில் விளையாடுவதை பார்க்கையில், விளையாட தெரியாத சிறுவர்கள் இளைஞர்களிடம் சென்று ஆடுவது போல் உள்ளது என்று கூறினார்.

3வது டெஸ்ட் தொடங்கி முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 161 ரங்களுக்கு சுருண்டது. கோலி முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக 97 ரன்கள் விளாசினார். இரண்டாவது இன்னிங்க்ஸை 357 ரங்களுக்கு இந்திய அணி டிக்ளர் செய்தது. எனவே இங்கிலாந்துக்கு இலக்காக 521 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்சில் இதுவரை இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

third 1

இந்நிலையில் இந்திய அணியை விமர்சித்த நாசர் ஹுசைன்-யை இந்திய ரசிகர்கள் வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். சிறுவர்கள் போல் ஆடுகிறார்கள் என்று தானே கூறினீர்கள். அவர்களது ஆட்டத்தை இப்பொது பாருங்கள் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.