இப்படி போனால் டெஸ்ட் கிரிக்கெட் காணமால் போய்டும். அப்புறம் காப்பாற்ற முடியாது – எச்சரித்த இங்கி வீரர்

hussain
- Advertisement -

டெஸ்ட் போட்டிகளை காலத்திற்கும் காப்பாற்ற வேண்டுமென்றால் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக சில காரியங்களை செய்ய வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமான பின்னர் டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர் கூட்டம் குறைந்து வருகிறது. கிரிக்கெட் என்றாலே தற்போது டி20 கிரிக்கெட் தான் என கிரிக்கெட் தெரியாத ரசிகர்கள் நினைத்த வருகின்றனர்.

- Advertisement -

ஆனால், ஒரு வீரரின் நிலைத்த திறமையை அறிந்து கொள்ள டெஸ்ட் போட்டிகள் தான் சிறந்தது என கூறி வந்தாலும் ஐந்து நாட்கள் ஒரு இடத்தில் தங்கி இருந்து டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை. டி20 கிரிக்கெட் 3 மணி நேரத்தில் முடிந்து ஒரு என்டர்டைன்மென்ட் ஆன பொழுதுபோக்கு கிடைப்பதால் ரசிகர்கள் அதனை பெரிதும் விரும்புகின்றனர். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் குறைவதால் ஐசிசி போதுமான வருமானம் கிடைப்பதில்லை.

அவ்வளவு தொகை போட்டு ஒரு போட்டியை நடத்தினாலும் மைதானங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் நான் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நான்கு நாட்களுக்கு குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்த முடிவிற்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெஸ்ட் போட்டியை காப்பாற்ற புதிய பல யோசனைகளை கூறியுள்ளார் நாசர் ஹுசைன்.

nasar

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆடுகளத்தை மட்டையான ஆடுகளமாக வடிவமைத்தால் அது இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு இருந்தால் போட்டி ஆர்வமாக இருக்காது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் முதல் ஆட்டத்தில் 300 ரன்கள் மட்டுமே எடுக்கப்படுகிறது. பந்துவீச்சாளர்களுக்கு இது பார்ப்பதற்கு சிறப்பாகவும் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கான விலை மிகவும் அதிகம். அந்த டெஸ்ட் போட்டிகளுக்கான மதிப்பை இந்த போட்டிகள் கொடுக்கும். என்னை பொருத்த வரை 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் மாற்றம் கொண்டு வர கூடாது. ஆனால், பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ப நல்ல ஆடுகளம் அமைத்தால் டெஸ்ட் போட்டியை பார்க்க இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டின் நாட்கள் குறைப்பு பற்றி பல்வேறு முன்னாள் வீரரகளும் தங்கள்து கருத்துக்களை தெரிவித்து வரு நிலையில் தற்போது நாசர் ஹுசைன் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தனது கருத்தினை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement