கோலிக்கு இந்த விடயம் செட் ஆகாது. அவரும் விட்டுக்கொடுக்கமாட்டாரு அதோட அவரோட பார்மும் போய்டும் – நாசர் ஹுசேன் எச்சரிக்கை

hussain
- Advertisement -

இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பின்னர் இந்திய அணியின் சில மாற்றங்கள் இருக்கும் என கூறப்பட்டது. மேலும் கோலி தலைமையிலான இந்திய அணி மூன்று வடிவ கிரிக்கெட்டையும் சிறப்பாக ஆடி வந்தாலும் முக்கியமான தொடர்களின் நாக்கவுட் சுற்றுக்களில் தோற்று வெளியேறுவதால் ஏதாவது ஒரு வடிவ கிரிக்கெட்டிற்கு வேறு கேப்டனை நியமிக்கலாம் என்று அவ்வப்போது பரவலாக பேச்சுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

Kohli-1

- Advertisement -

அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், ஒரு நாள் கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக கோலியை தொடரவைத்து டி20 போட்டிகளுக்கு ரோஹித்தை கேப்டனாக நியமிக்கலாம் என்று பரிசீலனை செய்யப்பட்டதாகவும் தகவல்களும் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை இரட்டைக் கேப்டன்ஷிப் குறித்து பிசிசிஐ தரப்பில் எந்த ஒரு அதிகாரபூர்வமான கருத்தும் வெளியாகவில்லை.

சமீபத்தில் கூட ராகுல் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டது. அதன் காரணம் யாதெனில் கொரோனா வைரஸ் காரணமாக இனிவரும் காலங்களில் இந்திய அணி அதிகமான போட்டிகளில் பங்கேற்கும் என்பதினால் வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கலாம் என்ற காரணத்திற்காக இந்த யோசனை கூறப்பட்டது. ஆனால் இது குறித்தும் எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

nasar 2

இந்நிலையில் அவ்வாறு இரட்டைக் கேப்டன்ஷிப் அளிக்கப்பட்டால் அது இந்திய அணியை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது : இந்திய அணிக்கு இரட்டை கேப்டன்ஷிப் என்பது செட் ஆகாது.

- Advertisement -

ஏனெனில் கோலி எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு வீரராகவே உள்ளார். தன்னுடைய கேப்டன் பொறுப்பை அவர் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார். எனவே இன்னொரு கேப்டனை நியமிக்கும்போது அணிக்குள் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் அவரது ஆட்டம் இதனால் பாதிப்படையும் வாய்ப்புள்ளது. இதனால் இரட்டை கேப்டன்ஷிப் பற்றி யோசிப்பதை தவிர்த்து அணித்தேர்விலும், வீரர்களின் வரிசையிலும் கவனம் செலுத்தலாம்.

Kohli

ஏனெனில் இதுவரை நான்காவது இடத்திற்கான வீரர் குறித்து பல மாறுதல் ஏற்பட்டாலும் ஒரு சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் அந்த வீரர்கள் நீக்கப்படுகிறார்கள் இது போன்ற குறைகளை கலைக்க வேண்டுமென்று நாசர் ஹுசேன் கூறினார். மேலும் ஏற்கனவே கோலி நான் கிரிக்கெட்டை எந்த இடத்தில் விட்டேனோ அங்கிருந்து துவங்கவே ஆசைப்படுகிறேன். இந்த நாட்களிலும் என்னை மனதளவில் தயார்படுத்தி வருகிறேன் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement