இவரை அவசரப்பட்டு வெளியேற்றினால் இந்திய அணிக்கு தான் பெரிய ஆபத்து – நாசர் உசேன் எச்சரிக்கை

hussain
- Advertisement -

தற்போது 38 வயதான மகேந்திர சிங் தோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார்? என ரசிகர்களும் பல முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின்னர் தற்போது வரை அவர் எந்த ஒரு கிரிக்கெட்டும் ஆடவில்லை. தற்காலிக ஓய்வில் இருக்கும் அவர் ஐபிஎல் தொடரை வைத்து திட்டமிட்டிருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்ற ஒரு எண்ணத்தில் இருந்தார் எனவும் செய்திகள் உலா வருகிறது.

dhoni

- Advertisement -

மேலும் தற்போது ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால். அவருக்கு கண்டிப்பாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்காது என பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், விரேந்தர் சேவாக், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர் மீண்டும் தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்ற கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும் சென்னையில் பிறந்தவருமான நாசர் ஹூசைன் தோனியின் அருமையைப் பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :
இந்திய அணிக்கு தோனியை தேர்வு செய்ய முடியுமா? இந்த கேள்வி மட்டும் தான் கேட்கப்பட வேண்டும்.

MSdhoni

ஒரு அணிக்கு தேர்வாக வேண்டிய எல்லா கேள்விகளும் தோனிக்கு பொருந்தும். நான் பார்த்தவரை டோனியால் இந்திய அணிக்கு பெரிய அளவில் பங்களிக்க முடியும். இன்னும் அவரிடம் நிறைய கிரிக்கெட் உள்ளது. தோனியிடம் இன்னும் நிறைய திறமை இருக்கிறது. பிசிசிஐ தனக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.

- Advertisement -

ஒருமுறை தோனி ஓய்வு பெற்று விட்டு வெளியேறி விட்டால் அவரை மீண்டும் கொண்டுவருவது கடினம். அவர் போன்ற மகத்தான வீரர்கள் எப்போதாவதுதான் கிடைப்பார்கள். அவரை முன்பே அவரை ஓய்வு பெற சொல்லி தள்ளிவிட வேண்டாம் என்று கூறியுள்ளார் நாசர் ஹூசைன். இவரின் இந்த கருத்து தோனியின் ரசிகர்களால் அதிக அளவு வரவேற்பை பெற்றுள்ளன.

dhoniplay

தோனியின் தலைமையில் தான் இந்திய அணி அடுத்தகத்திற்கு முன்னேறி கோப்பைகளை கைப்பற்ற ஆரம்பித்தது. இந்தியாவின் ராசியான வெற்றிகரமான கேப்டன் என்று பெயர் எடுத்த தோனி ஐ.சி.சி.யின் அனைத்து வகையான கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement