இவர் பேட்டிங் பண்ணா ஒருநாள் புல்லா கூட உக்காந்து பார்க்கலாம் – இந்திய வீரரை புகழ்ந்த நாசர் ஹுசேன்

hussain
- Advertisement -

கிரிக்கெட்டில் ஒரு தலைமுறை பேட்ஸ்மேனை அடுத்த தலைமுறை பேட்ஸ்மேன் ஒப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் எந்த ஒரு வீரரும் ஒருசில காலகட்டத்தில் தினறுவது வழக்கம்தான். அதற்கு உதாரணமாக பல கிரிக்கெட் வீரர்களும் இருக்கின்றனர். குறிப்பாக என்னதான் சச்சின் 100 சதங்கள் அடித்து இருந்தாலும் சில தொடர்களில் அவரது ஆட்டத்திறன் குறைந்து இருக்கலாம். ஆனால் அவர் அதனால் திறமை அற்றவர் சொல்லமுடியாது. அந்த சூழ்நிலையில் அவர்கள் சிறப்பாக செயல்பட முடியவில்லை அவ்வளவு தான்.

nasar

அதை போன்று ஒவ்வொரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறை பேட்ஸ்மேன்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும். அதனால் இரு தலைமுறை வீரர்களையும் ஒப்பிடுவே கூடாது. ஒவ்வொரு தலைமுறையிலும் மிகச் சிறந்த வீரர்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். அந்த வகையில் நான் ரசித்த தான் ரசித்த நான்கு பேட்ஸ்மேன்கள் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் தனது குழந்தைப் பருவ ஹீரோவாக டேவிட் கோவரை முதலில் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து அவர் கூறுகையில் : டேவிட் கோவர் தனது சின்ன வயது ஹீரோ அவரின் ஆட்டத்தை என் கண்முன்னே கண்டு ரசித்து உள்ளேன். இங்கிலாந்து அணிக்காக அவர் 1978 ஆம் ஆண்டு முதல் 92 ஆம் ஆண்டு வரை விளையாடி 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

lara

இரண்டாவது சிறந்த ஆட்டக்காரர் என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் சேர்ந்த பிரைன் லாரா. அவரது பேட்டிங் செய்த பழைய வீடியோக்களை பார்த்துள்ளேன். அவர் பேட்டிங் செய்யும் விதம் மிக அற்புதமானது. அவருக்கு எதிராக நான் அதிகமாக கேப்டன் பொறுப்பில் இருந்தது இல்லை ஆனால் லாரா பேட்டிங் செய்யும்போது நான் பீல்டிங் செய்துள்ளேன்.

- Advertisement -

இரண்டு பீல்டர்களுக்கு இடையில் அவர் சிறப்பாக பவுண்டரி விளாசுவார். இதேபோன்று பாகிஸ்தான் அணியின் வீரரான சயீத் அன்வர் பேட்டிங் சிறப்பாக இருக்கும் என்று பாராட்டினார். அதன்பிறகு நான்காவதாக இன்றைய தலைமுறை பேட்ஸ்மேனான இந்திய கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் செய்யும் விதம் குறித்து பாராட்டிப் பேசினார்.

kohli 2

இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் கேப்டன் விராட் கோலியை போல சேஸிங்கில் ஒரு சிறந்த வீரரை பார்க்கவே முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படிப்பட்ட இலக்கையும் துரத்தம் திறன் கொண்ட கோலியின் பேட்டிங்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement