- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ.. அவ்வளவு அதிகமாக மலர்வார்.. 14 வயது வீரரை பாராட்டிய – பாரத பிரதமர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் சிறிய காயத்தோடு இம்பேக்ட் பிளேயராக விளையாடி வந்த வேளையில் கடந்த சில போட்டிகளுக்கு முன்னதாக அடைந்த காயம் காரணமாக அவர் வெளியிலேயே இருந்து வருகிறார். இதன் காரணமாக ரியான் பராக் அந்த அணியை தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.

வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய மோடி :

அதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பதிலாக 14 வயதான இளம் வீரர் சூர்யவன்ஷி அவரது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். மிக இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்ற சூரியவன்ஷி முதல் 2 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

- Advertisement -

அதன்பிறகு குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியின் போது 35 பந்துகளில் சதம் அடித்த அவர் 14 வயதிலேயே மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும், அதிவேக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தையும் பிடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து தற்போது தொடர்ச்சியாக விளையாடி வரும் அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்காகவும் மிகப்பெரிய வீரராக வலம்வர வாய்ப்புள்ளதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் அவரை பாராட்டி வருகின்றனர். அதோடு தற்போது 14 வயதாகும் அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியும் என்பதனால் அவரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு அவருக்கான பாராட்டுக்களும் பலரது மத்தியிலும் குவிந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை இந்திய நாட்டின் பாரத பிரதமர் மோடியும் காணொளி வாயிலாக வாழ்த்தியுள்ள சம்பவம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் பாட்னா நகரில் நடைபெற்ற இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டி துவங்கிய போது காணொளி வாயிலாக பேசிய நரேந்திர மோடி விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து பேசியிருந்தார். அப்போது இளம்வீரான வைபவ் சூர்யவன்ஷி குறித்தும் சில பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க : 27 கோடிக்கு ஸ்பார்க்கே மிஸ்.. திறமை இருந்தும் ரிஷப் பண்ட் சொதப்ப இதான் 2 காரணம்.. கில்கிறிஸ்ட் பேட்டி

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : வைபவ் மிக இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் தற்போது அறிமுகமாகி விளையாடி வரும் அவரிடம் கடினமான உழைப்பு உள்ளது. மேலும் அவர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ அவ்வளவு அதிகமாக மலர்வார் என மோடி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -